குரு பெயர்ச்சி பலன் 2023: ராகு உடன் இணைந்த குருபகவான்..திடீர் லக்..ஜாக்பாட் அடிக்கும் ராசிக்காரர்கள்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். ராகு செவ்வாய் பகவானைப் போல செயல்படுவார் என்பதால் குரு மங்கல யோகம் கைகூடி வரும். ராகு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுப்பார். மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவானால் யாருக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டமும் அதனால் ஜாக்பாட் கிடைக்கும் யோகமும் கைகூடி வரும் என்று பார்க்கலாம்.
ஜென்ம குரு: குரு பகவான் ராகு உடன் இணைந்து தலைமேல் பயணம் செய்கிறார். இனி நீங்கள் கவனத்தோடும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய கால கட்டம். வெளிநாட்டுக்கு வேலை, படிப்புக்காக செல்லலாம். தொழில், வேலையில் கவனம் தேவை. தொழில் முதலீடுகளில் பெரிய அளவில் அகலக்கால் வைக்க வேண்டாம்.

விரைய குரு: ரிஷப ராசிக்காரர்களுக்கு விரைய குரு காலம், ராகு உடன் இணைந்திருப்பதால் நிறைய பணம் வரும். கையில் பணமாக வைத்திருக்காமல் நிலம், சொத்து வகையில் பணத்தை முதலீடு செய்யலாம். தங்க ஆபரணங்கள் வாங்கலாம். கூட்டுத் தொழில் செய்ய சரியான நேரமில்லை. பணத்தை இழக்க நேரிடும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். போட்டித்தேர்வில் வெற்றிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
லாப குரு: மிதுன ராசிக்காரர்ளுக்கு லாப குருவால் தொட்டது துலங்கப்போகிறது. பொன்னான காலம். இந்த காலத்தில் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்லது நிறைய நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கலாம்.
கர்ம குரு: கடக ராசிக்காரர்களுக்கு பத்தில் குரு பதவி பறிபோகும் என்று சொல்வார்கள். பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனமும் நிதானமும் தேவை. தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் வம்பு வைத்துக்கொண்டால் வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது.
பாக்ய குரு: சிம்ம ராசிக்காரர்களுக்கு பாக்ய குரு ஆன்மீக பயணத்தை தருவார். ராகு உடன் இணைந்துள்ளதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் இனி கவலைகள் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது.
அஷ்டம குரு: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் ராஜயோகத்தை தருவார்கள். திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார். வெளியூர் வெளிநாட்டு பயணங்களைத் தரப்போகிறார் குருபகவான். பண வருமானத்தை அள்ளித்தரப்போகிறார்.
களத்திர குரு: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாக பார்வையிடுகிறார். குருபார்வை கிடைத்தாலே வாழ்க்கை பொன்னாக ஜொலிக்கும். 12 ராசிகளில் அதிக பலனை அடையப்போவது துலாம் ராசிக்காரர்கள்தான். குரு நிறைய நன்மைகளை அள்ளித்தரப்போகிறார் மன மகிழ்ச்சியோடு அனுபவிக்கத் தயாராகுங்கள்.
ருண ரோக சத்ரு குரு: விருச்சிக ராசிக்காரர்களே.. ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் நிதானமும் கவனமும் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். வங்கிக் கடன் கிடைக்கும். வீடு நிலம் வாங்கலாம். ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது நல்லது.
பூர்வ புண்ணிய குரு: தனுசு ராசிக்காரர்களே.. குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான
ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். கையில் இருக்கும் பணத்தை சொந்த பந்தங்களுக்கு கடனாகத் தர வேண்டாம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. நகை, கார், வண்டி வாகனம் என சுப செலவுகளாக செய்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
சுக ஸ்தான குரு: மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் பல ஆண்டு காலமாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வரும் உங்களுக்கு நன்மைகள் நடைபெறப்போகிறது. வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கையில் குரு பகவான் மலர்ச்சியை ஏற்படுத்தப்போகிறார்.
தைரிய குரு: கும்ப ராசிக்காரர்களே.. குரு மூன்றாம் வீட்டில் ராகு உடன் பயணம் செய்கிறார். ஏழரை சனி இருப்பதால் எந்த பிரச்சினை என்றாலும் கவலைப்பட வேண்டாம். பொறுமையும் நிதானமும் தேவை. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம் நன்மைகள் அதிகரிக்கும்.
குடும்ப குரு: மீன ராசிக்காரர்களே...உங்கள் ராசி நாதன் குரு பகவான் இரண்டாம் வீட்டில் ராகு உடன் பயணம் செய்கிறார். காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சிவ ஆலயங்களில் நவ கிரக குரு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.












Click it and Unblock the Notifications