குரு பெயர்ச்சி பலன் 2024.. குரோதி ஆண்டில் பார்க்கும் குரு.. கோடி நன்மை பெறப்போகும் ராசிக்காரர்கள்!
சென்னை: குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். குரோதி ஆண்டில் சித்திரை மாதம் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் குரு பகவான். ரிஷப ராசியில் அமரும் குருவின் பார்வை சில ராசிக்காரர்கள் மீது விழுகிறது. குருவின் பார்வையால் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான்: பொன்னவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. எனவேதான் திருமணம், குழந்தை பாக்கியம், வேலையில் உயர்வு, வருமானத்தில் உயர்வு, நோய் நொடியற்ற வாழ்க்கை வேண்டும் என்று விரும்புபவர்கள் குரு பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

கன்னி: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் கடந்த ஓராண்டு காலமாக அல்லல் பட்டிருப்பீர்கள். நோய்கள் படுத்தியிருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கும். தடைகள் அதிகம் ஏற்பட்டிருக்கும். இனி தடைகள் விலகும் காலம் வந்து விட்டது. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். கூடவே மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்வையிடுகிறார். அதிர்ஷ்டமும் நன்மைகளும் தேடி வரப்போகிறது. வருமானம் கூடும். புதிய திருப்பம் ஏற்படும்.
குரு பார்வை பலம் இருந்தால்தான் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நட்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும்.
ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு உங்கள் ராசியில் உள்ள கேதுவை பார்வையிடுகிறார். பாக்ய குரு நிறைய பாக்யத்தையும் தேடித்தருவார். சுபங்கள் அதிகம் நடைபெறும் காலம். ஓராண்டு காலத்திற்கு ராஜயோகம்தான். கடன்களை அடைக்க வருமானத்தை தரப்போகிறார். குரு பார்வை மூன்றாம் வீட்டில் விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் திருமணம் நடைபெறும்.
ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். சொந்த வீடு கட்டுவீர்கள் சொத்து சுகம் வாங்கும் யோகம் வரும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு அதிகார பலம் ஆளுமை புகழ் கீர்த்தியை தரும். உயர்ந்த அந்தஸ்தை தரும். குரு பார்வையால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

விருச்சிகம்: குரு பெயர்ச்சியால் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் கவனம் தேவை. காதல், திருமணம் தொழில் பார்ட்டனர்களிடம் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருப்பது அவசியம். குரு உங்கள் ராசியை தன்னுடைய ஏழாம் பார்வையால் நேரடியாக பார்க்கிறார். திடீர் மாற்றங்களை கொண்டு வரும். குரு பார்வை ராசிக்கு மூன்றாமிடத்தில் பதிகிறது. சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும்.
11ஆம் இடத்தின் மீது குருவின் பார்வை படுவதால் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். சினிமா துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு உற்சாகத்தை தரும். பயணங்கள் செய்பவர்களுக்கு நன்மை அதிகரிக்கும். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும்.

மகரம்: குரு பெயர்ச்சியால் குரோதி ஆண்டில் புண்ணியங்கள் நிறைந்த ஆண்டாக அமைகிறது. பூர்வ ஜென்ம புண்ணியம் தேடி வரும். குரு உங்க ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் மனதில் உள்ள எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும். ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேறும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும்.
குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார். வெளிநாடு யோகத்தை கொடுப்பார். வேலை உயர்ந்த பதவி உயர்வோடு கூடிய வருமானம் கூடும். பரிபூரண ராஜயோகம் செயல்படப்போகிறது. வேலையில் உற்சாகத்தையும் உயரதிகாரிகளின் ஆதரவையும் குரு பெற்றுத்தருவார்.
குரு பகவான் உங்களுடைய லாப ஸ்தானத்தை பார்க்கும் போது வருமானத்தில் லாபத்தை தருவார். பாக்ய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். புகழும் கீர்த்தியும் தேடி வரும். அப்பாவினால் சொத்துக்கள் கிடைக்கும். . திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடைபெறும் வாய்ப்பும் தேடி வரும். குரோதி தமிழ் புத்தாண்டில் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் குதூகலம் அடையப்போகிறீர்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications