குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் குரு பெயர்ச்சி.. சித்திரை முதல் அதிரடி.. ஜாக்பாட் யாருக்கு?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி பகல் 1மணி அளவில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை,ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வார். குரு பெயர்ச்சியால் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம் : குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீடான தன, குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். வாக்கு வன்மை அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பு கூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பண வருமானம் பல வழிகளிலும் வரும் வர வாய்ப்புள்ளது. கடன்கள் அத்தனையும் தீரும். குருவின் பார்வையால் உத்தியோக உயர்வு, புதிய தொழில் அமையும். வேலை விசயமாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன்னையும் பொருளையும் அள்ளித்தரப்போகிறார் குருபகவான். குடும்பத்தில் சுபகாரியம் நிறைவேறும். தடைகள் நீங்கி திருமணம் சிறப்பாக நடைபெறும்.

ரிஷபம் : உங்கள் ராசிக்கு லாப ஸ்தான அதிபதி குருபகவான் ஓர் ஆண்டு காலம் உங்கள் ஜென்மத்தில் அமர்கிறார். உங்கள் இராசிக்கு குரு பகவான், 8 மற்றும்11 இடத்துக்கு அதிபதி. இவர் ஜென்மத்தில் அமர்ந்து கேதுவை பார்வையிடுவதால் நன்மையே செய்வார். வீடு நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரும். திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளால் நல்ல செய்தி தேடி வரும். கூட்டு தொழில் சிறப்படையும். தெய்வகாரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாடு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பண விசயங்களில் கவனம் தேவை.
மிதுனம் : குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு அமர்கிற இடம் உங்களுக்கு விரைய ஸ்தானம் என்றாலும் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 மற்றும் 10ஆம் இடத்துக்கு அதிபதி. 12ஆம் வீட்டில் மறைந்த குரு விபரீத ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறார். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு வாங்கும் அமைப்பை குரு பகவான் ஏற்படுத்துவார். இதுநாள்வரை கடன் தொல்லையில் இருந்தவர்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். கணவன் மனைவி இடையே வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
கடகம்: மே 1ஆம் தேதி முதல் குருபகவான் உங்கள் இராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். நினைத்தது எல்லாம் நிறைவேறும். யோகங்கள் கைகூடி வரப்போகிறது. வெற்றி மீது வெற்றி வரப்போகிறது. குருவின் பார்வையால் தொட்டதெல்லாம் பொன்னாகும். எதையும் தைரியமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும். எதையும் துணிந்து முடிவு செய்வீர்கள். லாப குரு தொழில் வியாபாரத்தில் லாபத்தை வாரி வழங்கப்போகிறார்.
சிம்மம் : குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருந்து பத்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். பத்தாம் வீட்டிற்கு வந்து அமரும் குரு பெரிய அளவில் நன்மைகளை செய்வார். உங்கள் இராசிக்கு 5 மற்றும் 8ஆம் இடத்திற்கு அதிபதி குரு 10ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் தொட்டது துலங்கும் மண்ணும் பொன்னாகும். மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.
குரு பார்வையால் பல வழிகளிலும் பண வருமானம் வரும். திருமணம் சுப காரியம் நடைபெறும். கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது. எதிரிகள் தொல்லை இல்லாமல் போகும். கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போகும். புதிய தொழில் தொடங்குவீர்கள். சுகமும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வீடு தேடி வரும்.
கன்னி: உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போவதால் அள்ளிக்கொடுக்கப்போகிறார் குரு பகவான். குரு பகவான் உங்கள் ராசிக்கு சுகஸ்தானம் களத்திரஸ்தானத்திற்கு அதிபதி. அவர் பாக்கியத்தில் அமர்ந்து உங்கள் இராசியை பார்வையிடுவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். பாக்ய ஸ்தான குரு உங்கள் சக்தியை அதிகரிக்கப்போகிறார். புகழும் கீர்த்தியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன் கடனாக கொடுத்த பணம் உங்கள் வீடு தேடி வரும். மே மாதம் உச்சத்திற்கு போகும் உங்களைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுவார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications