வாழ்க்கையையே புரட்டி போடும் குரு.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
சென்னை: சுப கிரகமான குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதன் மூலம் ரிஷப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் உங்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.

கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதில் குரு பெயர்ச்சியும் ஒன்று
குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பங்கள் நடந்துள்ளன.அந்த வகையில் ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி மூலம் என்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
ரிஷப ராசிக்கு இத்தனை காலம் 12ம் இடத்தில், அதாவது மேஷ ராசியில் இருந்தார் குரு. இப்போது ஜென்ம இடத்தில் குருவாக மாறி உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார்.
கொஞ்சம் கஷ்டம் இருக்கும்: இந்த குரு உங்கள் வீட்டிற்கு வருவதால்.. நீங்கள் இனி செய்வதில் எல்லாம் கொஞ்சம் இடர்பாடுகள் வரும். எதாவது ஒரு விஷயத்தை செய்ய நினைத்தால் அது தடங்கலாக மாறும். பைக்கை ஸ்டார்ட் செய்ய நினைத்தால் கூட பேட்டரி போய் நிற்குமே.. அப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தடங்கல்கள் வரும்.
தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும்: இப்படி தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். ரிஷப ராசிக்கு ஜென்ம இடத்தில் குரு மாற உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார். அவர் இருக்கிற இடத்தை விட பார்க்கிற இடம் முக்கியம் என்பதால் தடங்கல்கள் வந்தாலும்.. நீங்கள் நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள்.
நல்ல விஷயங்கள் என்னென்ன?: எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது.
திருமணம் கைகூடும்.
வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு.
வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.
நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்.,
குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள்.
குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம்.
வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
என்ன செய்ய வேண்டும்: ராமேஸ்வரம் கோவில், மதுரை மீனாட்சி கோவில்களுக்கு செல்வது நல்ல பரிகாரமாக அமையும். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு மே 1 மாலை சென்று பூஜை செய்வது பலன் தரும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications