குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டமோ, அதிர்ஷ்டம்.. அள்ளிக் கொடுக்கும் குரு.. இனி ராஜவாழ்க்கை
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூஜைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம் - குரு 10 ஆம் இடத்தில் இருந்து 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சுப காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும். திருமணம் ஆகாதோருக்கு திருமணம் நடைபெறும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமையும். நிலம், வீடு, வாசல், ஆடை, நகை உள்ளிட்ட ஆபரணங்கள் சேரும்.
அதிர்ஷ்டம்
குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னைகள் சரியாகும். ஆச்சர்யமளிக்குமளவுக்கு குரு அதிர்ஷ்டத்தை வருவார். பண வரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர் மூலம் நல்ல ஆதாயம் உண்டு. வசதி வாய்ப்புகள் கூடும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். மனதில் திருப்தி ஏற்படும்.
காதல்
கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பும் நல்லபடியாக நடக்கும். வாழ்க்கை துணை வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். கணவன் - மனைவி அன்யோன்யம் கூடும். பிரிந்த கணவன் - மனைவி ஒன்றிணைவார்கள். காதல் உறவு இனிமையாகும். சிலருக்கு காதல் உறவு திருமணத்தில் நிறைவேறும். தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும்.
பெற்றோர்
பெற்றோர் சொல் கேட்டு நடப்பது நன்மைகளை கொடுக்கும். வண்டி, வாகனம் வாங்குவீர்கள். பெண்கள் நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்களை செய்வீர்கள். உத்யோகத்தில் நல்ல ஏற்றம் உண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. வெளிநாடு பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பெற்றோர் வழி சொத்துகளில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் விருத்தியாகும்.
ஆரோக்கியம்
அஷ்டம சனி நன்மைகளை தரும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வயிறு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். ஆனால் அதை சரியான வழியில் சேமித்து பாதுகாக்க வேண்டும். சிம்ம ராசியினர் திருநள்ளாறு அல்லது திருகொள்ளிக்காடு கோயில் சென்று வழிபடுவதன் மூலம் தடைகள் நிவர்த்தியாகி நல்ல பலன்களை கொடுக்கும்.
-
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும் -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications