ஜனவரி மாத பலன்: மகர ராசிக்கு திடீர் ராஜயோகம்.. முயற்சிகள் அனைத்திலும் ஜெயம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் மகர ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ராசிக்கு அதிபதியாக இருக்கும் சனி பகவான் நல்ல ஸ்தானத்தில் இருக்கிறார். எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயம் ஏற்படும். முயற்சி ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் முயற்சிகளில் அற்புதமான வெற்றி ஏற்படும். வேலை ரீதியான பயணங்கள் ஏற்படும். உடம்பில் சளி தொந்தரவுகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
வேலைவாய்ப்பு
காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவுகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. கையெழுத்து தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்களில் மிகுந்த கவனம் தேவை. குரு 6 இல் இருப்பதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். கைகளில் சிலருக்கு பிரச்சனை ஏற்படக் கூடிய அமைப்புள்ளதால் கவனம் தேவை. செவ்வாய் பகவான் 12 இல் அமர்ந்துள்ளதால் தை மாதத்தில் வீடு மாறும் வாய்ப்புள்ளது.
காதல் அமைப்பு
வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. வீட்டில் சிறு சிறு பழுகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அம்மாவுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்திர பகவான் 5 ஆம் இடத்தில் இருப்பதால் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்களை திருமணம் செய்து கொள்ளும் அமைப்பு உள்ளது. கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் ஏற்படும்.
முன்னேற்றம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். வங்கித் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சாப்பாட்டு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இனிப்பை நிறைய சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வயிற்றில் கொழுப்பு இருக்கும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை.
திடீர் ராஜயோகம்
சூரியன் 12 இல் இருப்பதால் திடீர் ராஜயோகங்கள் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், வேலை மாற்றம் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. சனி 10 ஆம் பார்வையாக பார்ப்பதால் கவனம் தேவை. அரசு ஊழியர்கள் சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளது. கல்வி, வியாபாரம், தொழிலுக்காக வெளிநாடு சென்று வருவீர்கள்.
வெற்றி
சனி சுக்கிரனோடு தொடர்பில் இருப்பதால் நல்ல பொருளாதார மேம்பாடு ஏற்படும். மூத்த சகோதரரின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். 12 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் இருப்பதால் நல்ல நல்ல மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு கட்சி மாறும் வாய்ப்புள்ளது. கோவை கோனியம்மன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications