ஜூன் ராசி பலன்: கும்பம் ராசி வீட்டுக் கதவை தட்டும் மகாலட்சுமி.. இனி அதிர்ஷ்டம் கொட்டும்
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோஷம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவாசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மிகவும் நல்ல மனம் கொண்டவர்கள். அவர்கள் மனதில் கோபம் வராத வரை எந்தப் பிரச்னையும் இல்லை. இவர்களின் கோபத்தை யாராவது தூண்டிவிட்டால் கட்டுப்படுத்த முடியாது. கும்பம் என்றாலே முன்னேற்றம் என்று அர்த்தம். மிகவும் செல்வ, செழிப்புடன் வாழ்வதற்கான யோகங்கள் இவர்களுக்கு அதிகம் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம்
கல்வியில் சிலர் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டிய நிலை உருவாகும். கலை, கணினி, வணிகவியல், மேலாண்மை சம்பந்தப்பட்ட படிப்புகளில் இருப்போருக்கு நல்ல யோகம் கிடைக்கும். குரு பகவான் ஐந்தாம் இடத்துக்கு வந்திருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது குழந்தை பேறு உண்டாகும்.
முன்னேற்றம்
குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வி, சுப காரிய தடைகள் நீங்கும். குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறும். மூன்றாம் இடத்தில் சுக்கிர பகவான் இருப்பதால் நகை, ஆபரணங்கள் சேரும். புதிய கார், இரு சக்கர வாகனம், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் பொருட்கள் வாங்குவீர்கள். கலை, சினிமா, ஊடகத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்புகளால் முன்னேற்றம் ஏற்படும்.
அங்கீகாரம்
உத்யோகம் மற்றும் தொழிலில் நன்றாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு வெற்றி கிடைக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டு. அரசியல் துறையினருக்கு புதிய பதவிகள், அங்கீகாரம் கிடைக்கும். அரசுத்துறையில் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம் உண்டு. சிலருக்கு எதிர்பார்த்த இடம் மாற்றம் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும்.
கவனம்
ராசியில் ராகு பகவானும், கேது பகவான் ஏழாம் இடத்திலும் இருப்பதால் ஏதாவது ஒரு வகையில் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். இதனால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். கூடவே செவ்வாயும் இருப்பதால் மனக்கசப்பை தவிர்க்க முடியாது. எனவே கணவன், மனைவி முடிந்தவரை வாக்குவாதத்தை தவிர்த்துவிட்டு அரவணைத்து செல்வது நல்லது.
பரிகாரம்
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏழரை சனி இருப்பதால் மனச்சங்கடம், குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எனவே எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதால் தடைகள் விலகி நல்ல யோகங்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications