ஜூன் ராசி பலன்: மிதுனம், கடக ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.. ஆனா ரொம்ப எச்சரிக்கை
ஜூன் மாத ராசி பலன்கள்: சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் ராஜயோகம் உண்டாகும். அதிகப்படியான நிம்மதி இந்த மாதத்தில் கிடைக்கும். நிறைய மருத்துவச் செலவுகள், வழக்குகளுக்கு செலவு செய்த நிலைமை எல்லாம் மாறி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். குரு மற்றும் சனி யோகத்தில் இருப்பதால் யோகாதிபதிகள் எல்லோரும் நல்ல முறையில் வேலை செய்வார்கள்.

மாமியார், மருமகள் பிரச்சனைகள் சரியாகி சாந்தமாக மாறும். வீட்டில் அதிகப்படியான குடும்பப் பிரச்சனை நிகழ்வதைத் தவிர்க்க குலதெய்வ வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வீடு தேடி வந்து வரன் அமையும் யோகம் உண்டாகும். பிரிந்த கணவன், மனைவி திரும்ப சேர்ந்து இன்னொரு குழந்தை பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
புத்திக்காரகன் என்று சொல்லக்கூடிய புதன் நல்ல நிலையில் இருப்பதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். நவக்கிரகத்தில் இருக்கும் புதன் பகவான் வழிபாடு மற்றும் நவக்கிர மந்திரங்களை 11 நாள்கள் 11 முறை சொல்வது அற்புதமான பலன்களைத் தரும். குடும்பத்திலும், தனிப்பட்ட விஷயங்களிலும் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். பூங்காவுக்குச் செல்வது, நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது நல்ல பலன்களைத் தரும். புதன்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபடுவது அற்புதத்தை ஏற்படுத்தும். மன நிம்மதி கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்காரர்கள் பொறுமையை அதிகளவில் கையாளக் கூடிய மாதமாக இருக்கும். ஜூன் 7 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் கேதுவுடன் இணைவதால் அச்சப்படத் தேவையில்லை. கேது எந்த அளவுக்கு கெடுப்பாரோ, அந்த அளவுக்கு கொடுக்கவும் செய்வார். கடகத்தைப் பொருத்தவரை சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் திங்கள்கிழமைகளில் காலை வேளையில் நேரத்தில் எழுந்திருப்பது நல்லது.
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என என்ன நடந்தாலும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. திங்கள்கிழமை 6 மணி முதல் 7 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செல்வது, சுத்தமான காற்றை சாப்பிடுவது அற்புதத்தை ஏற்படுத்தும். சமையல் செய்யும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருப்பவர்கள் ராமரை வழிபடுவது சிறப்பைத் தரும்.
செவ்வாய்க்கிழமைகளில் அனுமனை வழிபடுவது, அனுமன், ராமன் புகைப்படத்தைப் பார்ப்பது நல்லது. பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த மாதத்தில் இடமாற்றம் நிகழும். இதனால் அச்சப்படத் தேவையில்லை. பொறுமையைக் கையாண்டு, கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. யார் பேசினாலும் காதில் கேட்டுக் கொண்டு, அதனை வெளியில் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து செயல்படுவது நல்லது. நீண்ட நேரம் தூங்காமல் இரவில் மட்டும் தூங்கினால் எடுத்த காரியங்களில் வெற்றியையும், அற்புதத்தையும் ஏற்படுத்தும். மாடுகளுக்கு உணவளிப்பது நல்ல பலன்களைத் தரும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications