Rasi Palan This Week: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் லாட்டரி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-that-kadagam-cancer-signs-will-get-from-nov-24-to-30

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்பாக நல்ல அனுகூலம் காணப்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். கூட்டாளிகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும்.

ஏற்றம்

இழந்த விஷயங்கள் மீண்டும் கிடைக்கும். உங்களுடைய செல்வாக்குகள் கூடும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும், தொழிலிலும் உங்களை ஏளனமாகப் பேசியவர்கள் தேடி வரும் காலகட்டம். பிள்ளைகள் விஷயம், துணை விஷயம், தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.

சிக்கல் தீரும்

உறவு முறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செல்வாக்குகள் கூடும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டம். பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். முதலீடுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் ஏற்றத்தைக் கொடுக்கும். உள்ளுணர்வு உங்களை மேன்மை அடையச் செய்யும்

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வாகனங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வண்டி, வாகன மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான நேரமாக இருக்கும்.

வழிபாடு

அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59 ஆவது பாடலை படிப்பது சங்கடங்களைத் தீர்க்கும். கோளார் பதிகத்தை கேட்பது மேன்மையைத் தரும். சிவன், பார்வதி தேவி வழிபாடு நன்மையைத் தரும். திங்கள்கிழமை தோறும் பச்சரிசி மாவு தானமாகக் கொடுப்பது சகல பிரச்சனைகளையும் நீங்கும். மன அழுத்தம் தீரும். எலுமிச்சம்பழ சாறு மற்றும் அபிஷேகத்திற்கு கொடுப்பது நல்ல ஏற்றத்தை தரும். ராஜியம் கிடைக்கும். இழந்த பெருமைகளைப் பெறும் யோகம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+