Kadagam: கடக ராசிக்கு சொத்துகள் சேர்க்கும் யோகம்.. மார்ச் 15 வரை பேச்சில் ரொம்ப கவனம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியினருக்கு சொத்துகளை வாங்கக்கூடிய மாதமாக இருக்கும். 12 ஆம் இடத்தில் குரு இருப்பதால் சுப கடன்களை கொடுத்து, சுப விரயத்தை கொடுத்து சொத்து வாங்க உதவி செய்வார். நீண்ட நாட்களாக இடம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முயற்சி செய்தால் கட்டாயமாக நல்ல நிலம் அமையும். கடன் வாங்கியாவது சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
பகை சேரும் வாய்ப்பு
8 ஆம் இடம் வலுப்பதால் மாமனார், மாமியார் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய பகைகளை சேர்க்கும் மாதமாக இருப்பதால் கவனம் தேவை. சொத்துகள் சேரும். ஆனால், உறவினர்கள் விஷயத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து நீங்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
11 ஆம் வீட்டு அதிபதி உச்சமாகி 9 ஆம் இடத்தில் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். கிடைக்காத விஷயங்கள் எல்லாம் இனி உங்களுக்கு கிடைக்கும் நேரமாக இருக்கும். குருவின் பார்வை பலன் அதிகளவில் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
முயற்சிகளில் வெற்றி
புதிய முயற்சிகள், உத்திகளை மேற்கொள்வீர்கள். உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு பலன் கிடைக்கும். புதிய ஐடியாக்கள் மூலமாக வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆளுமை அதிகரிக்கும். ஆளுமைத் தன்மை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படம். ஆவணங்களை வைத்து கடன் பெறுவோருக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குழந்தைகள் ரீதியாக இருந்து வந்த மன குழப்பங்கள் தீரும். பிள்ளைகளுக்கு முதலீடு செய்வீர்கள்
பேராசை
இடமாற்றம் உண்டாகும். ஆடைகள் வாங்குவது, உங்களுக்குத் தேவையான விஷயங்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். திட்டமிட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். பாக்கிய ஸ்தானம் வலுப்பதால் தந்தை மூலம் ஆதாயம், ஆசிர்வாதம் உண்டாகும். லாபங்களை அடைவதற்கான பேராசை ஏற்படும் என்பதால் கவனம் தேவை. அவசரப்பட்டு முடிவெடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். தடைகள் வந்து நிவர்த்தியாகும். எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. மாதத்தின் முதல் பகுதியில் பேச்சில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்
மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமான யோகங்கள் கிடைக்கும். உதவி செய்வதற்கு 4 பேர் வருவார்கள். பிரச்சனைகளில் இருந்து விடுபட தியானம் செய்வது நல்லது. மன நிம்மதியைத் தரும். எந்தவொரு விஷயத்தையும் செய்யாமல் அமைதியாக இருப்பதை கடைப்பிடிப்பது நல்லது. பக்கத்தில் இருக்கும் அம்பாளை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு தினந்தோறும் குங்குமம் இட்டுக்கொள்வது நன்மையைத் தரும்.
-
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு வெற்றியை குவிக்கும் நேரம்.. வேலையில் மட்டும் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம் -
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 4 ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications