ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை

Subscribe to Oneindia Tamil

ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.

kanni-june-month-rasi-palan-what-kind-of-benefits-will-kanni-rasi-people-get-during-june-2026

இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது.

தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசியினருக்கு அட்டகாசமான காலகட்டமாக இருக்கும். பெரிய நன்மைகள், போட்டியில் வெற்றி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்கள் செவ்வாய் இருப்பதால், கோபம், வேகம் அதிகமாக இருக்கும். பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. முதல் 20 நாட்களுக்கு வார்த்தைகளில் கோபம் தெறிக்கும் என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

முன்னேற்றம்

ராசிநாதன் 10 ஆம் இடத்தில் வலுவாக இருக்கிறார். 11 ஆம் இடத்தில் குரு சுக்கிரன் தொடர்பு கொள்வதால் வியாபாரம், தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம், லாபம் உண்டாகும். உங்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் குரு, சுக்கிர பகவான் இணைந்திருப்பதால் எல்லா விஷயங்களிலும் லாபங்கள், வெற்றிகள் உண்டாகும்.

பயணங்களால் ஆதாயம்

ராசிநாதன் வலுவாக இருப்பதால் சகல விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அந்த பயணங்கள் மூலமாக நிறைய ஆதாயங்களைப் பெறுவீர்கள். காதலில் இருப்பவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழல் ஏற்படும். ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும் ஏதாவதொரு சோதனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

கவனம்

எதிர்பாலினத்தவரை நம்பாமல் இருப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். ஜாமீன் கொடுப்பது, பிறருக்கு நிற்பது, கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சிக்கலில் சிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பங்குச்சந்தையில் முதல் 20 நாட்களில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் நஷ்டங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்தியா வந்து செல்லக்கூடிய அல்லது இந்தியாவிலேயே செட்டிலாகக் கூடிய யோகம் உண்டு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+