Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு கட்டம் சரியில்லை.. இந்த ஒரு தவறை மட்டும் பண்ணிடாதீங்க
Kanni Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், கன்னி ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
கன்னி (Kanni Rasi Palan)
கன்னி ராசியினருக்கு மிக கவனமாக இருக்கக்கூடிய மாதமாகும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுபவர்களிடம் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருள்களை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய விரயங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சாம்பார் சாதம் அல்லது தாயிர் சாதமும், எலுமிச்சை ஊறுகாயும் ஏழைகளுக்கு கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.
சட்டவிரோதம்
அரசுத் துறை, அரசியல்வாதிகள் அதீத கவனமாக இருக்க வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடமிருந்து தள்ளி இருப்பது நன்மை பயக்கும். சட்ட புத்தகங்கள், கணக்கு வழக்குகளை, ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களில் எந்தவித சாகசங்களும் செய்யாமல் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டுவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. நிதானமாகவும், பொறுமையுடன் செயல்படுவது நன்மையைத் தரும். உறவுகளிடையே உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கூட்டு முயற்சி, சக ஊழியர்களுடன் நட்பு போன்றவை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
முதலீடுகள் செய்யும் போது அதீத கவனமாக இருப்பது முக்கியம். பெரிய முயற்சிகள், முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆன்மீகம், வழிபாடு பயணம் போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளால் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், அரசியல்வாதிகளுக்கு உடனிருப்பவர்கள் செய்யக்கூடிய சதி செயல்கள் பெரிய மன கஷ்டத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமைகள், விஷயங்கள் விலகி செல்லும். வாராஹி வழிபாடு, விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications