ஆவணி மாத பலன்: கன்னி ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. ஒரு சில விஷயத்தில் கவனம்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக இந்த ஆவணி மாதம் அமையும். ஆவணி மாதத்தில் பெரும்பாலான நாட்கள் உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருக்கிறார். எல்லா விஷயங்களிலும் அவரசக் குடுக்கையாக செயல்படுவீர்கள். 12 ஆம் இடத்தில் சூரியன் வலுத்திருப்பதும், ராசியில் செவ்வாய், சனி தொடர்பு கொள்வது சிறு சிறு மன அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. நினைத்தது நடக்கவில்லை என்ற நிலை ஏற்படும்.
குடும்பம்
10 ஆம் இடத்தில் குரு இருப்பது, 11 ஆம் இடத்தில் சுக்கிரன், ராசிநாதன் இருப்பது மிகப்பெரிய நல்ல அமைப்பாகும். வீட்டில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வரும். நண்பர்கள் உங்களை கைவிடும் சூழல் ஏற்படும். உங்களுடைய கஷ்டமான நேரங்களில் நண்பர்கள் பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். சில உண்மை நட்புகளை அடையாளம் காட்டக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கவனம்
ஆவணி மாதத்தில் மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். ராசியில் செவ்வாய் இருப்பதால் டக்கென்று முடிவெடுகளை எடுத்து செலவு செய்வீர்கள். ஏதாவதொரு விஷயத்தில் மற்றவர்களை மிகவும் கடுமையாக திட்டும் நிலை ஏற்படும். அதன் மூலம் மனஸ்தாபங்கள் வரும் சூழல் ஏற்படும். இதுபோன்ற விஷயங்களில் கன்னி ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
பயணங்கள்
பெரிய அளவில் கெடுதல்கள் எதுவும் ஏற்படாது. அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். அந்த பயணங்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். பயணத்தின் மூலமாக நன்மைகள் நடக்கும் சூழல் ஏற்படும். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மாவட்டங்களில் வேலை செய்வதற்கான யோகம் ஏற்படும்.
வெளிநாடு யோகம்
உயர்கல்வி, வேலை, விசா, சிட்டிசன்ஷிப் பெறுவதற்கான யோகம் பெறுவீர்கள். பெரும்பாலானவர்கள் வெளிமாநிலம், வெளிநாடு போகும் யோகம், அதற்கான அனுமதி, நன்மைகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். 2, 4, 6, 8 ஆகிய பாவங்கள் சுபத்துவமாக இருக்கிறது. 4 ஆம் இடம் குருவின் பார்வையில் வலிமையாக இருப்பதால் அம்மா வழி உறவுகள், தாய்மாமன், சித்தி, பெரியம்மா, தாய் மாமா மூலமாக சில நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும்.
கடன் நீங்கும்
6 ஆம் இடத்தில் குருவின் பார்வையில் ராகு இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். எடுத்த காரியங்களில் எல்லாம் நன்மைகளைப் பெறுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும். கடன் தீர்ப்பதற்கான யோகம் உண்டாகும். புதிய கடன்கள் கிடைக்கும் யோகம் உண்டு. வீட்டுக் கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications