Rasi Palan This Week: கன்னி ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டு.. இந்த விஷயத்தில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பழைய கடன்களை எல்லாம் அடைத்து முடிக்கும் எண்ணம் உருவாகும். அதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வேற்று மொழி மனிதர்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் ஈடுபடத் தொடங்குவீர்கள். தெய்வத் திருப்பணிகளைச் செய்வீர்கள்.
பாதிப்புகள் நீங்கும்
கோயில்களுக்கு சிலைகள் வாங்கிக் கொடுக்கும் பாக்கியம் உண்டாகும். ஆன்மீக சுற்றுலா, யாத்திரைகள் செல்லும் யோகம் உண்டாகும். நேர்மறையான செயல்களைச் செய்து மகிழ்வீர்கள். மனதில் நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையில் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
நல்ல செய்தி
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நல்ல அனுகூலமாக காலகட்டமாக இருக்கும். ஏற்றம், வளர்ச்சி பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள் அனைத்தும் உங்களை விட்டு பூரணமாக நீங்கும். உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் நல்ல மேன்மை உண்டாகும்.
சுபகாரியங்கள்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. நல்ல முதலீடுகளைச் செய்யும் யோகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நினைத்த காரியங்கள் நடக்கும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
ஆரோக்கியம்
ஜாயிண்டுகளில் வலி, அலர்ஜி, பல் தொடர்பான பிரச்சனை, தலைச் சுற்றல், பித்தத்தால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றில் கன்னி ராசியினர் மிகுந்த கவனமாக இருக்கி வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தினங்களில் மதிய வேளையில் 1 மணி முதல் 2 மணிக்குள் ஏழைகளுக்கு சாப்பாடு உணவு தானம் அளிப்பது , செவ்வாய்க்கிழமையில் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையைத் தவிர உணவுகள் தானமாகக் கொடுப்பது நல்ல அனுகூலத்தை தரும்.
வழிபாடு
நாள்தோறும் கோவிந்த நாமங்களை சொல்லி வருவது கேட்பது மேன்மையை உண்டாக்கும். பெருமாள் தாயார் மற்றும் விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.
-
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications