Karthigai Matha Palan: உச்சத்தை தொடும் மிதுன ராசி.. கடன் மட்டும் வாங்கிடாதீங்க
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மிதுன ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

யோகங்கள்
சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் ராசியதிபதி 20 ஆம் தேதி வரை 5 ஆம் வீட்டில் அதிர்ஷ்டம் எனும் இடத்தில் இருக்கிறார். உங்களுடைய தேவைகள் அனைத்தையும் 20 ஆம் தேதிக்குள் வைத்துக் கொள்வது நல்லது. 20 ஆம் தேதிக்கு மேல் 6 ஆம் வீட்டிற்கு வருகிறார். வீடு, மனை, சொத்துக்கள், வண்டி, வாகனங்கள் சார்ந்த விஷயங்கள், சுய தேவைகள், நபர்களைச் சந்திப்பது போன்றவற்றை 20 ஆம் தேதிக்குள் செய்து கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
20 ஆம் தேதிக்கு மேல் 6 ஆம் வீட்டிற்கு வருவதால் கண்டிப்பாக உங்களுக்கு கடன் சார்ந்த, வேலை சார்ந்த பிரச்சனைகளைக் கொடுப்பார். ஒரு வேலை மாற்றத்தைக் கொடுப்பார். வேலை ஆட்கள் மூலமாக மனக் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தாயின் ஆரோக்கியம், உங்களுடைய ஆரோக்கியத்திலும் குறைபாடுகளைக் கொடுக்கும் வாய்ப்புள்ளது.
வீடு கட்டும் அமைப்பு
4க்கு உடையவர் 6 ஆம் வீட்டில் இருந்தால் கடன் வாங்கி வீடு கட்டும் அமைப்பு ஏற்படும். 3 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய சூரியன் 6 ஆம் வீட்டில் இருப்பதால் முயற்சிகள் கைகூடும். அதிக முயற்சிகளைப் போட்டு வேலை செய்யக்கூடிய சூழலும், அதில் அனுகூலமும் ஏற்படும். எதையும் சாதிக்கலாம் என்கிற தைரியம் ஏற்படும். 5, 12 ஆம் அதிபதியான சுக்கிரன் சுக்கிரன் 5 ஆம் வீட்டிலேயே 10 ஆம் வீட்டிலேயே இருப்பதால் குலதெய்வம் உங்களுடன் 10 ஆம் தேதி வரை நீங்கள் செய்யக்கூடிய அனைத்து செயல்களிலும் சாதகமாக இருந்து வழிநடத்தும் யோகம் ஏற்படும்.
வெளிநாட்டு வேலைகள்
10 ஆம் தேதி வரை குழந்தைகள் சார்ந்த விஷயங்கள், குழந்தை ஒற்றுமை சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். ஒரு சிகிச்சை எடுக்கிறீர்கள் என்றால் 10 ஆம் தேதிக்குள் வைத்துக் கொள்வது நல்லது. அதற்குப் பிறகு 12 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டிற்கு வரும்போது வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து சொந்த வேலைக்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.
கவனம் தேவை
அலைச்சல்கள், பயணங்கள் இருந்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். 10 ஆம் தேதிக்குப் பிறகு குழந்தைகள் சார்ந்த விஷயங்களில், குடும்ப ஒற்றுமை சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. செவ்வாய் உங்களுடைய லக்கினத்திற்கு 7 ஆம் வீட்டிற்கு வரப் போகிறார். 70 சதவீதம் நற்பலன்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். வேலை, பணம், லாபம் போன்ற விஷயங்கள் 20 ஆம் தேதி வரை நன்றாக இருக்கும்.
நல்ல வரன் கிடைக்கும்
குரு பகவான் ராசிக்குள் வக்கிர கதியில் வரப் போவதால் நல்ல வரன்கள் வரும் யோகம் ஏற்படும். குறை சொல்வதைக் குறைத்துக் கொண்டு வரன் தேடுவது நல்லது. குரு பகவானே 10 ஆம் அதிபதியாகவும் இருப்பதால் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். கிளைகள் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. 2 வருமானங்கள் வரும் யோகம் உண்டாகும்.
சனிவக்கிரம்
சனியும் வக்கிர நிவர்த்தியாவதால் முழுக்க முழுக்க நல்ல பலன்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். சனி ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் 12 ஆம் தேதிக்குள் உங்களுடைய செலவுகளை செய்து கொள்வது நல்லது. வக்கிரமாக இல்லையெனில் 12 ஆம் தேதிக்கு மேல் திடீர் வருமானம், திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்கள், அப்பா மூலமாக உதவிகள் கிடைக்கும். கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications