Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் துலாம் ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

யோகங்கள்
சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் துலாம் ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு ராசியாதிபதி 10 ஆம் தேதி வரை தனது சொந்த வீட்டிலேயே இருக்கப் போகிறார். அச்சமில்லாமல் இருக்கலாம். 10 ஆம் தேதிக்கு மேல் ஆனாலும் கூட 2 ஆம் வீட்டு தன ஸ்தானத்திற்கு வந்த தனது சொந்த வீட்டையே பார்க்கிறார். விபரீத ராஜயோகம் ஏற்படும். திடீர் பண வரவு, திடீர் வருமானங்கள், திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
செல்வம் கொட்டும்
செல்வம் சேர்க்கை ஏற்படும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். வாக்கு மூலமாக தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான வளர்ச்சி ஏற்படும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். ஏதாவது ஒரு வழியில் பணம் வரும், மறைமுகப் பணங்கள் வந்து சேரும். யோகமுள்ள மாதமாக இருக்கும். சூரியனும் 2 ஆம் வீட்டில் இருப்பதால் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலில் வளர்ச்சி
4 கிரகங்கள் இரண்டாம் வீட்டை தொடர்பு கொள்வதால் 4 வகையான வருமானங்கள் வரும். அல்லது 4 மடங்கள் வந்து சேரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். நல்ல கிரகங்கள் எல்லாம் நல்ல ஸ்தானத்தில் வந்து அமரப் போவதால் இந்த மாதம் நல்ல மாதமாக இருக்கும். 19 ஆம் தேதிக்குப் பிறகு குரு ராசியைப் பார்ப்பதால் கெட்ட விஷயங்கள் அனைத்தும் விலகும்.
யோகம்
வராமல் இருந்த பணம் வந்து சேரும். வெளிநாட்டு வருமானங்கள் வரும். வெளிநாட்டில் வேலை செய்யும் யோகம் உண்டாகும். குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு கூட்டிச் செல்வீர்கள். சனி உங்கள் ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் இந்த விஷயங்கள் எல்லாம் நடக்கும். வக்கிரமாக இல்லையெனில் 12 ஆம் தேதிக்குப் பிறகு யோகமான காலம் ஏற்படும். எதிரிகளை ஜெயிக்கும் யோகம் உண்டு.
ஆரோக்கியம்
சனி உங்களுக்கு 4, 5க்கு உடையவர். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். லோன் வாங்கி வீடு வாங்கும் அமைப்பு ஏற்படும். இந்த மாதம் உங்களுக்கு அருமையான மாதமாக மாறும். குழந்தைகளிடம் கவனமாக இருப்பது நல்லது. எதைத் தொட்டாலும் லாபத்தைக் கொடுக்கக் கூடிய நல்ல மாதமாக இருக்கும்.
வருமானம்
மனைவி, கணவர் மூலமாக வருமானம், குடும்பம் மூலமாக வருமானம் ஏற்படும். முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பணத்தால் வரும் பிரச்சனைகள் நீங்கும். சர்வ தோஷங்களும் இந்த மாதம் நிவர்த்தியாகும். தடைகள் அனைத்தும் விலகும். கெட்ட விஷயங்கள் விலகும் வாய்ப்பு ஏற்படும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications