சொல்லி அடிக்கும் கும்ப ராசி.. பணத்தை அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்ட தேவதை.. இதில் மட்டும் கவனம்
Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு மனப் போராட்டங்கள் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். வெளியில் நன்றாக தெரிவீர்கள். ஆனால் மனதளவில் பிடிக்காத விஷயத்தை செல்வதால் அழுத்தத்தில் இருப்பீர்கள். ஆனால் மற்ற விஷயங்களில் அற்புத பலன்கள் கிடைக்கும்ஜென்ம சனி விலகியுள்ளதால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குருப்பெயர்ச்சியில் உங்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளும் ஒரே நாளில் தீர்க்கும் காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
கணவராக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும், மனைவியாக இருந்தால் கணவரின் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருவிழா, கூட்டத்தில் செல்லும்போது பிள்ளைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி அதிர்ஷ்டம், ஜாக்பாட் கொடுக்கும் சூழல் உண்டாகும். தொழிலில் லாபம், முன்னேற்றம் உண்டாகும். அடிமைத் தொழிலை விட்டு சொந்த தொழிலை தொடங்குவீர்கள். திருமணத் தடை, புத்திர சந்தான தடை நீங்கும். பகை விலகி உறவினர்களிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மாணவர்கள்
உத்தியோகம், வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் அக்கறை எடுத்து படித்தால் நல்ல மதிப்பெண், பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
சொத்து வாங்கும் யோகம்
வீடு, நிலம், மனை, தோட்டம், ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் உண்டாகும். எடுத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் வந்து சென்றாலும் அதில் வெற்றி பெறக்கூடிய அனுகூலமாக நேரமாக இருக்கும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. பிறர் குடும்ப விஷயங்களில் உங்கள் தலையீடு, உங்கள் குடும்பத்தில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.
வழிபட வேண்டிய தெய்வம்
தினந்தோறும் உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனமாக இருப்பது அற்புதத்தை ஏற்படுத்தும். முதலீடு, சேமிப்புகளில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு, துர்க்கை வழிபாடு, பிள்ளையார் வழிபாடு வாழ்க்கையில் ஏற்றத்தையும், அற்புதத்தையும் கொடுக்கும். பிள்ளைகளுடன் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பிள்ளைகள் விஷயத்தில் கவனம்
பிள்ளைகளை கட்டுப்படுத்துவதாக நினைத்து அவர்களை திட்டுவது, அசிங்கமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுபிக்ஷத்தை உண்டாக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பண வரவு உண்டாகும். பெரிய பதவிகளுக்கு செல்லும் யோகம் உண்டாகும். திங்களூர் சந்திரன் கோவிலுக்கு செல்வது அற்புதத்தை தரும்.
-
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications