Chandra Grahan 2025: மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும்.. கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம்
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திரகிரகணத்தால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்கி வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவு புண்ணியம் கிடைக்கும்.
5 ராசியினர் கவனம்
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.
யோகமான ராசி
இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
மேஷம்
மேஷ ராசி, லக்கினக்காரர்களுக்கு லாப ஸ்தானம் 11 ஆம் இடத்தில் சந்திரன், ராகு சேர்க்கை நல்ல அமைப்பு கிடையாது. சளி தொந்தரவு, நுரையீரலில் நீர் கோர்ப்பது போன்றவை ஏற்படும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பணம் திருட்டுப் போகும் வாய்ப்புள்ளது. நண்பர்களால் வேதனைகளை அனுபவிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. ஆன்லைனில் பணத்தை இழக்கும் அபாயம் ஏற்படும்.
வாகன விபத்து
கால் முட்டிகளில் அடிபடும் அபாயம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் பயணம் செய்வது ஆபத்தை தரும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். சந்திரனும், ராகுவும் உங்களுக்கு மன சஞ்சலங்களை ஏற்படுத்தும். மூத்த அண்ணன், தம்பி, அக்காவால் பாதிப்புகள் ஏற்படும்.
பெயர் கெடும் வாய்ப்பு
எதை நம்புகிறீர்களோ அதன் மூலம் இழக்கும் வாய்ப்புண்டு. எதையுமே கண் மூடித் தனமாக நம்பாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத உறவுகளில் இருப்பவர்களுக்கு பெயர் கெடும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. மூத்தவர்களிடம், அதிகாரிகளிடம், நண்பர்களால் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு, பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. விட்டமின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் சூழல்
உண்டாகும்.
பரிகாரம்
சந்திரகிரகண பாதிப்புகளில் இருந்து தப்பிக்க 12 ராசியினருக்குமே ஒரே பரிகாரம் தான். பூரண கும்பம் போன்ற கலசத்தில் நெல் பயிர்களை போட்டு, தர்ப்பைத் துண்டு, 11 ரூபாய் தட்சணை வைத்து பூஜை செய்யக் கூடியவர்களுக்கு தானம் செய்வது கிரகண தோஷம் நிவர்த்தியாகும். மேஷ ராசிக்காரர்கள் கலசத்தில் பால் ஊற்றி வழிபடுவது கூடுதல் நன்மையைத் தரும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications