மதுரை சித்திரை திருவிழா முதல்நாள் - காணும் இடமெங்கும் மீனாட்சி... சிம்ம வாகனத்தில் வலம் வந்த அம்மன்
மதுரை சித்திரை திருவிழாவின் முதல்நாளன்று மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மன் வேடம் அணிந்து காணும் இடமெங்கும் காட்சி அளித்தனர் சிறுமிகள். சித்திரை திருவிழாவின் முதல்நாளில் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்தார் மீனாட்சி அம்மன். கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடையுடன் வலம் வந்த சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, கொரோனா பெருந்தொற்றுக் காரணமான கடந்த 2 ஆண்டுகள் கோவில் வளாகத்திலேயே பக்தர்களின் பங்கேற்பின்றி நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சித்திரைத் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கொடியேற்றம்
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி அம்மன் வீதி உலா
இதனையடுத்து சித்திரை பெருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலின் உள்ளே அமைந்துள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி. பிறகு அங்கிருந்து புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பகவிருட்சம் வாகனத்தில் சுந்தரேசுவரரும் பிரியாவிடையும் எழுந்தருளி விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாசி வீதிகளில் கோலாகலம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில் அம்பாளும் சுந்தரேஸ்வரப் பெருமான் வீதி உலா வருவதை ஆயிரக்கணக்கான மக்கள் மாசி வீதிகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காணும் இடமெங்கும் மீனாட்சி
சிறுவர்கள் சிறுமிகள் மீனாட்சி அம்மன் போல வேடமணிந்தும், கோலாட்டம், சிலம்பட்டம், பொய்கால் குதிரையாட்டம், உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய கலை வெளிப்படுத்தியவாறு மாசி வீதி விதி உலா வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மீனாட்சி திருக்கல்யாணம்
வரும் 12ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சிதான் நடைபெறும் என்பது ஐதீகம். 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி சித்திரைத் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications