மகர ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. விபரீத ராஜயோகத்தால் கொட்டும் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம் ஆடி மாத பலன்
மகர ராசிக்காரர்களுக்கு கடந்த ஒரு மாதமாகவே நல்ல காலம் தொடங்கிவிட்டது. விபரீத ராஜயோகம் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்க்காத விஷயங்கள் அனைத்தும் நடக்கும். ஜூலை 15 முதல் 24 ஆம் தேதி வரை 5 ஆம் அதிபதி அவருடைய வீட்டில் இருந்து அருள்புரிவதால் குலதெய்வத்தின் ஆசி, பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரம், அடையாளம், காதல், கவிதை, கலை, காமம் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
ஜூலை 24 ஆம் தேதிக்குப் பிறகு 5 ஆம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் அமரப் போகிறார். அதுமட்டுமல்லாமல் 12 ஆம் வீட்டு அதிபதியுடன் இயங்கப் போகிறார். 5 ஆம் இடம் மூலமாக 6 ஆம் இடமாக வழுக்கப் போகிறது. 7 ஆம் இடத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்களுக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கணவரின் உடல்நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது.
பேச்சில் கவனம்
நீங்கள் சொல்வதை வீட்டில் இருப்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்வது, அல்லது கேட்காமல், மதிக்காமல் நடந்துகொள்ளும் காலகட்டம் ஏற்படும். வார்த்தையில் மிகுந்த கவனம் தேவை. 5 ஆம் இடம் மூலமாக 6 ஆம் இடம் இயங்கப் போகிறது. குரு உங்களுக்கு நல்ல கிரகம் இல்லை என்பதால் அவர் 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பது நன்மையே. முயற்சி செய்யும் வேலையால் நல்ல அனுகூலங்கள் கிடைக்கும். நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்வீர்கள்.
வாய்ப்பு தேடி வரும்
தொழில் ஸ்தானம் வலுப்பதால் நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிறைய அனுகூலங்கள், ராஜயோகம் கிடைக்கும். எதிர்பார்க்காத விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். வீடு, வேலை செய்யும் இடத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. 8 ஆம் அதிபதி 7 இல் அமர்வதால் துணைக்கும் உங்களுக்கும் வாய்த் தகராறு, பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
முன்னேற்றம்
ஏற்றம், வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் அடையாளத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கான வாய்ப்புகள், தொழில் விருக்தி, மேன்மை கிடைக்கும். பெண் மூலமாக மிகப்பெரிய ராஜயோகம், அந்தஸ்து, கெளரவம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நல்லவைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். இனி நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாகும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications