Magaram Rasi Palan: மகர ராசிக்கு இந்த மாதத்தில் அற்புதமான யோகம்.. பண மழை கொட்டப் போகுது
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே யோகாதிபதிகள் சுக்கிரனும், புதனும் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த புரட்டாசி மாதம் பிறந்திருக்கிறது. எல்லா விதத்திலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் விரைவில் நடக்கும் யோகம் உண்டாகும். தடங்கலாகிக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனி நடக்கும்.
ஆரோக்கியம்
ராசிக்கு 8 ஆம் இடத்தில் அமர்ந்திருந்த சூரியன் 9 ஆம் இடத்தில் வந்து அமர்ந்திருப்பதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தந்தைக்கு சிறு சிறு உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தந்தையுடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
பண வரவு
உங்களுடைய ராசிக்கு ஆதரவாக ராசிநாதன் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். பண வரவு உண்டாகும். வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. செவ்வாய் பலமாக 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பெரிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும்.
லாபம் அதிகரிக்கும்
தாய் வழியில் சில உதவிகள் கிடைக்கும். ராசிக்கு 6 ஆவது இடத்தில் குரு பகவான் தொடர்ந்து அமர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வீண் பழிகள் வந்து சேரும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் நன்றாக இருக்கும். லாபம் அருமையாக இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
உத்தியோகத்தில் உங்கள் கைகள் ஓங்கியிருக்கும். அதிகாரிகள் மட்டுமல்லாமல் சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மகளுக்கு வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும் யோகம் உண்டாகும். ஸ்ரீ மீனாட்சியம்மனை வழிபாடு செய்து வந்தால் அற்புதமான மாற்றத்தையும், ஏற்றத்தையும் பெறுவீர்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவது நன்மை பயக்கும். கடலைப் பருப்பு தானமாகக் கொடுப்பது நல்லது. இந்த மாதம் அற்புதமான மாதமாக உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications