Masi Matha Palan: மகர ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாசி மாதத்தில் மகரம் ராசியினருக்கு (Magaram Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் மகரம் ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தன பிராப்தம் கைகூடும். பணம், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லா விதமான லாபங்களும் கிடைக்கும். வெளியில் இருந்து வர வேண்டிய பணங்கள் எல்லாம் இப்போது வந்து சேரக்கூடிய யோகம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு இருக்கும் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும்.
தொழில்
பணத்துக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது. எதிர்பார்த்துக் காத்திருந்த லோன்கள் கிடைக்கும். நிறைய பேருக்கு கோவிலுக்கு தானம் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். மகர ராசி பல் நிபுணர்கள், சொற்பொழிவாளர்கள், மார்க்கெட்டிங் ஏஜெண்ட், பேச்சாளர்கள் போன்றோருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். பெரிய வெற்றியைக் காணக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
பணம், பொறுப்பு
நிறைய பேருக்கு பணம், பொறுப்பு வந்து சேரும். ஜல்லி, மணல், கட்டுமானம் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள், டாஸ்மாக் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய பணங்கள் வந்து சேரும். நினைத்த எல்லா காரியங்களும் சாதகமாக நடக்கும். பெரிய வெற்றிகள் காணப்படும் சந்தோஷம் மிகக் குறைவாகவே இருக்கும். பொருளாராத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
கையிருப்பு பணம் மாசி மாதத்தில் கொட்டியிருக்கும். யாரிடம் பணம் கேட்டாலும் உங்களுக்கு பணம் கிடைக்கக் கூடிய காலகட்டம். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.
அனுகூலம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் நல்ல காலகட்டம். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் ஏற்றம் உண்டாகும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. சேமிப்பு, முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். பேச்சைத் தொழிலாக கொண்டவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றி அற்புதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications