தை அமாவாசை: பஞ்ச திவ்ய யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
தை அமாவாசை: தை அமாவாசை தினமான இன்று உருவாகும் மகாலட்சுமி மற்றும் திவ்ய யோகத்தால் 5 ராசிகளுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப் போகிறது. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் அந்த 5 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடும் புண்ணிய நாளாக தை அமாவாசை நாள் கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் அனைத்துவிதமான நன்மைகள் மற்றும் முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும். தை அமாவாசை மற்றும் பிபர்வரி 9 ஆம் தேதி மகர ராசியில் புதாதித்ய யோகம், சதுர்கிரஹி யோகம், மகாலட்சுமி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் ஆகிய யோகங்கள் உருவாகின்றன. பல யோகங்கள் உருவாகவுள்ள இந்த அருமையான ராசியில் 5 ராசிகளுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்: பஞ்ச திவ்ய யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உருவாகப் போகின்றன. இந்த யோகத்தால் தொழில் சார்ந்த விஷயங்களின் உங்களுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் வெற்றி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே ஆதரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பண வரவு உண்டாகும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்தில் உருவாகும் பஞ்ச திவ்ய யோகத்தால் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. தந்தை மற்றும் மூதாதையர்களின் சொத்துகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அவர்களிடமிருந்து கிடைக்கும் நல்ல ஆலோசனைகளால் வெற்றிகள் உண்டாகும். நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் அதிர்ஷ்டம் உண்டாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களிலும் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
கடகம்: கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு ஏழாம் வீட்டில் உருவாகும் பஞ்ச திவ்ய யோகத்தால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. காதல் வாழ்க்கையில் சிறப்பான காலமாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திருமணமானவர்கள், காதலர்கள் இடையே அன்பு பெருகும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் பஞ்ச திவ்ய யோகம் உருவாவதால் யோகத்தை அனுபவிக்கப் போகின்றீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். கல்வித் துறையில் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களுடைய பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்ததைவிட பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு லக்கினத்திலேயே 5 திவ்ய யோகம் உருவாகிறது. இந்த திவ்ய யோகத்தால் அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அனுபவிக்கப் போகின்றனர். உங்களுடைய முதலீடு மூலமாக அதிக லாபம் மற்றும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மன உறுதி, தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவகளிலும் உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும். சொத்து தொடர்பான நல்ல பலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications