மேஷத்துக்கு ஏழரை சனி.. ஆனாலும் அதிர்ஷ்டம், பணம் கொட்டும்.. மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள்
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் மேஷ ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சனியால் பாதிப்பு உள்ளதை போல, சில நன்மைகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது, கைம்பெண்களுக்கு உதவுவது, பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பவர்கள், கடின உழைப்பாளிகளுக்கு, மனதார சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி பகவான் நல்ல பலன்களைத் தருவார். பறவை பட்சிகளுக்கு தான தர்மம், ஏழைகளுக்கு தான தர்மம் செய்பவர்களுக்கு கருணை மழை பொழிவார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்கு எந்தவிதமான பலன்களையும், பாதிப்புகளையும் தரப் போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடிய வகையில்தான் இந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கிறது. சனி, புதன், சுக்கிரன் ஒரு மாதிரியான நிலையில் தான் உள்ளன. ஆனாலும், உங்கள் ராசிக்கு யோகங்களை தரக்கூடிய சூரியன், சந்திரன், ராகு, குரு ஆகிய கிரகங்கள் நல்ல அமைப்பில் உள்ளது. அதனால், பெரிய கஷ்டங்கள், நஷ்டங்கள் எதுவும் இல்லாமல் சுபமான மாதமாக இருக்கும்.
மாதம் முழுவதுமே ராசி நாதன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இது முயற்சிகளை பலிக்க வைக்கக்கூடிய அமைப்பாக இருக்கும். உங்களுக்கு வேண்டிய அனைத்து விஷயங்களும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த மாதத்தில் 29 இல் ஏழரைச் சனி அமைப்பு வருகிறது. இந்த ஏழரைச் சனி உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் கொடுக்காது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய ஏழரை சனியால் நல்லவிதமான சொத்து சேர்க்கை, வீடு, வாகனம், நிலம் சேர்க்கை, பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது, பொன் வாங்குவது போன்ற சுபச் செலவுகள் உண்டாகும்.
30 வயதுக்குள் இருப்பவர்களுக்கு முதல் சுற்றில் ஏழரைச் சனியாக வந்தாலும் விரையச் சனியாகத்தான் வருகிறார். இரண்டரை வருடங்களுக்கு உங்களுக்கு கெடுபலன்கள் எதுவும் வராது. 2027 ஆம் ஆண்டு வரக்கூடிய சனிப்பெயர்ச்சியின் மூலமாகத்தான் மேஷ ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி வருகிறது. அப்போது தான் பிரச்சனை வரும். அதனால், ஏழரை சனி குறித்து மேஷ ராசியினர் அச்சப்படத் தேவையில்லை.
6 ஆம் இடத்தில் கேது இருப்பது கடன், நோய், வம்பு, அவமானம் வழக்கு போன்ற பிரச்சனைகளை விலக்கி வைக்கக்கூடிய அமைப்பாக இருக்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு எந்தவிதமான பெரிய தொந்தரவுகளும் இந்த ஏழரைச் சனி காலத்தில் உங்களுக்கு இருக்காது. தொட்டது துலங்கக்கூடிய அமைப்பாக உங்களுக்கு இருக்கும்.
ஏழரை சனி வருவதால் உங்களுக்கு மாற்றம் உண்டாகும். வேலை மாற்றம், தொழில் மாற்றம், இரண்டு வருடங்களுக்கு சம்பாதிக்கக்கூடிய அளவுக்கான பொருளாதார முன்னேற்றங்கள், மாற்றங்கள் இந்த மார்ச் மாதம் முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு படிப்படியாக ஆரம்பிக்கும் சிறப்பான முன்னேற்றமான காலமாக இருக்கும். பெரிய அளவில் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
அவரவருடைய வயதிற்கு ஏற்றாற்போல் திருமண அமைப்புகள் தடைகள் நீங்கும். புத்திர பாக்கியத்திற்கு தடைகள் இருக்கப் போவதில்லை. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டமான காலமாகத்தான் இருக்கும். 2015, 2016 இல் பட்ட கஷ்டங்களைப் போன்று ஆகிவிடுமோ என்ற எண்ண வேண்டாம். நீங்கள் செய்யக்கூடிய முயற்சிகள் பலிக்கும். சொந்த பந்தங்களிடம் இதுவரை இல்லாத அளவுக்கு இணக்கமான சூழல் உண்டாகும். இந்த மாதிரியான நற்பலன்கள் தரக்கூடிய சுப மாதமாக உங்களுக்கு அமையும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications