Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. ஏழரை சனியிலும் யோகம்

Subscribe to Oneindia Tamil

மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மீனம் ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.

மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

margazhi-matha-palan-what-kind-of-benefits-meenam-rasi-people-will-get-during-this-month

மார்கழி மாத பலன்கள்

22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.

நிகழ்வுகள்

19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் மீனம் ராசி பெற போகும் பலன்களை காணலாம்.

மீனம்

மீனம் ராசி மற்றும் லக்னத்தினருக்கு ராசியாதிபதி 4 ஆம் இடத்தில் இருக்கிறார். 10 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் இருக்கிறது. மிகப்பெரிய யோகத்தை கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கும். கேந்திர ஸ்தானத்தில் கிரகம் இருந்தால் வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையில் வெற்றி அடையும் யோகம் உண்டாகும். 4 ஆம் இடம் எனும் கேந்திர ஸ்தானத்தில் ராசியாதிபதி அமர்ந்திருப்பதால் மன மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாதமாக இருக்கும்.

அலுவலகத்தில் உங்களை டார்ச்சர் செய்து கொண்டிருந்தவர்கள் மாறிச் செல்வார்கள். நீங்கள் ஒரு விஷயத்தை செய்து முன்னேறும் யோகம் ஏற்படும். வேலை மாற வேண்டும் முயற்சி செய்பவர்கள் இந்த மாதம் முயற்சி செய்தால் வேலை மாற்றம் உண்டாகும். இதன் மூலமாக மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்சனையை சரிசெய்து முடிப்பீர்கள்.

முதலீடுகளால் ஏற்றம்

பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் தீரும். பிள்ளைகளுக்கு செலவு, பெற்றோருக்கு செலவு போன்ற நிலைமைகள் செவ்வாய்க்கிழமை தோறும் முதலீடுகள் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். அல்லது உண்டியலில் கூட சேமிக்கலாம். 12 மணி முதல் 1 மணிக்குள் இதனைச் செய்வது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். 10 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதால் அரசு, அரசாங்கம் சார்ந்த வேலைகள் கிடைக்கும்.

அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், பட்டங்கள், இடமாற்றங்கள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் வரும். வீடு, வண்டி, வாகனம், இடம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். தேவை உள்ளதா என்பதைப் பார்த்து செலவுகள் செய்வது, கடன் வாங்குவதை செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். தேவைக்கு அதிகமான விஷயங்களைச் செய்வதை தவிர்ப்பது நல்லது.

பண வரவு கொட்டும்

தாயின் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. பண வரவுகள் உண்டாகும். இந்த மாதத்தில் நீங்கள் என்ன முடிவு செய்திருந்தாலும் கட்டாயமாகப் பண வரவு உண்டாகும். பல்வேறு விதமான பாக்கியங்கள் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பிரிந்த தம்பதிகளுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும் யோகம் உண்டு. சந்தோஷமாக, மனநிறைவாக நடக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் நடக்கும். சேமிப்புகள் அதிகம் செய்யும் மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான ஏற்றம் பெறுவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+