மிதுன ராசி இழந்தவை தேடி வரும் - சொத்து சேர்க்கையால் வரப்போகும் மாற்றம்
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மிதுனம் ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் மிதுனம் ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
மிதுனம்
மிதுனம் ராசி மற்றும் லக்னத்தினருக்கு இந்த மார்கழி மாதம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற போகின்றன. மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் ஆறாம் இடத்தில் மறைந்துள்ளார். சுக கிரகங்கள் 3, 6, 12 ஆம் இடங்களில் மறைய கூடாது என்பார்கள். அதேநேரத்தில் மறைந்திருந்து நிறைவான பலன்களை கொடுக்கம் என்றும் கூறுவார்கள். அதனால் கவலைப்பட தேவையில்லை.
செல்வாக்கு
ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் புதன் - சுக்கிரன் பகவானுடன் உள்ளார். புத சுக்கிர யோகம் உருவாகிறது. உங்களின் எதிரிகள் பலமிழப்பார்கள். வீடு, நிலம், நகை, ஆடை ஆபரணங்கள், வண்டி வாகனம் உள்ளிட்ட அசையும் அசையா சொத்து சேர்க்கை நிச்சயம் உண்டு. கடந்த காலங்களில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை இந்த காலத்தில் மீட்டெடுப்பீர்கள். எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ அதே இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.
பெண்கள்
ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கி, மருத்துவ செலவுகள் குறையும். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். குழந்தைகளால் அதிக பலனடைவீர்கள். அதிலும் பெண் குழந்தைகளால் ஆதாயம் அதிகம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை கேட்டு நடந்தால் எல்லாவற்றிலும் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும்.
கவனம்
மனதில் தெளிவு பிறக்கும். தெளிவான திட்டமிடல்களால் பெரிய விஷயத்தை கூட எளிதாக முடித்து சாதனை படைப்பீர்கள். பொருளதாரம் நன்கு உயரும். சமூகத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன்பு நன்கு ஆலோசனை செய்யுங்கள். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம். உங்கள் வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications