ராஜா பகவத் மாதிரி இருக்கா.. விருச்சிகம் ராசிக்கு மாசி மாதத்தில் மெகா அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் விருச்சிகம் ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.

உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. ஐந்தாம் இடத்தில் உங்களின் ஏழாம் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு ஏழாம்இடத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. எட்டாம் இடத்தில் உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய் அமர்ந்துள்ளார். ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் கேது அமர்ந்துள்ளார்.

Masi Month rasi palan Viruchigam

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்துக்கான அதிபதியான சூரிய பகவான் நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) உங்கள் ராசியில் ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் உங்களின் நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார்.

மீனம் ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீட்சபங்க ராஜயோகம் கிடைக்கும். ஒரு கிரகம் உச்சத்தில் இருந்து மற்றொரு கிரகம் நீட்சமாகும்போது. அதை நீட்சபங்க ராஜயோகம் என்பார்கள். மாசி 17 ஆம் தேதி (1.3.2025)உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வக்கிரமாக போகிறார்.

சூரியன், செவ்வாய் நட்பு கிரகங்கள். அதனால் உங்களுக்கு நல்லது தான் நடக்கும். இந்த காலத்தில் உங்களின் திறமை வெளிப்படும். தொழிலில் பிரபலம் அதிகரிக்கும். அதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கூடும். அரசு சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் நன்கு பயனடைவார்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.

உங்கள் நிலம், சொத்து மதிப்பு உயரும். புதிய வாகனம் வாங்குவதற்கான சூழல் உள்ளது. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். நீண்ட காலமாக திட்டமிட்ட வீட்டு புனரமைப்பு பணிகள் நடைபெறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உடல் நலத்தில் இருந்த பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வை எட்டும் வாய்ப்புள்ளது.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல நினைவாற்றல் இருக்கும். உங்கள் பெற்றோருக்கு இடையே இருந்த மன கசப்புகள் நீங்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் பதவி உயர்வு தேடி வரும். கடன் குறையும். உங்கள் செயல்களை பார்த்து எதிரிகள் பயப்படுவார்கள். அதனால் எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.

தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தால் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பங்குசந்தையில் திடீரென முதலீடு அதிகரிக்கும். வருவாய் இரண்டு மடங்காகும். உங்கள் குழந்தைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும்.

உங்களின் தாய், இளைய சகோதரர் மற்றும் மாமனார் உடல் நலத்தில் கவனம் தேவை. இடம், பணி மாற்றம் ஆகியவற்றை இந்த மாதம் தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவுகள் உங்களுக்கு எதிராக நடந்து கொள்வார்கள். உங்களின் வார்த்தைகளால் உறவுகளுக்குள் சங்கடங்கள் வரும். எனவே வார்த்தைகளில் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் கவனம் தேவை.

ஜீரணம் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வபோது மன குழப்பம் அதிகரிக்கும். குழந்தைகளை பற்றிய கவலை அதிகரிக்கும். காதலில் பிரிவினை ஏற்படும் சூழல் உள்ளது. வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+