Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்சோம்னியா.. இரவு தூக்கம் தொலைகிறதா? சுகமான சுக்கிரனும் சந்திரனும் ஜாதகத்தில் எப்படி இருக்காங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவு தூக்கம் சரியாக இல்லாவிட்டால் பலருக்கும் பைத்தியம் பிடித்தது போலாகிவிடும். ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். இன்றைக்கு பலருக்கும் தூக்கம் பறிபோக பல காரணங்கள் உள்ளன. தூக்கமின்மை எனப்படும் இன்சோம்னியா(Insomnia) குறைபாடுகளுக்கு என்ன காரணம், ஜோதிடத்திற்கும் தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று பார்க்கலாம்.

தூக்கத்தின் அவசியம்: நம்முடைய உடல் வளர்ச்சிக்குத் தூக்கம் மிகவும் முக்கியம். 'குழந்தை நல்லா தூங்கினால்தான் நல்லா வளரும்' என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். நம் உடலின் வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்கள் (Growth hormone) இரவில்தான் சுரக்கின்றன. இதன் காரணமாகவே 6-8 மணிநேரம் அவசியம் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கலை... என்று ஒவ்வோர் இரவிலும் தூக்கம் வராததை நினைத்துப் பலரும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 30% மக்கள் 'இன்சோம்னியா' (Insomnia) என்ற தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவதாகக் கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள். கோவையில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் கூட இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

Medical astrology: Insomnia sleep disorder link in astrology and remedies

இன்சோம்னியா: பெரும்பாலான மக்கள் 'இன்சோம்னியா' என்ற தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால், அதாவது ஒருவர் 6-8 மணிநேரத்திற்கும் குறைவாகத் தூங்கினால் அவருக்கு இன்சோம்னியா பிரச்னை இருப்பதாக அர்த்தமில்லை. தூக்கம் வருவதற்கு மட்டும் வெகு நேரம் ஆவதை 'ஸ்லீப் ஆன்செட் இன்சோம்னியா' (Sleep Onset Insomnia) என்கிறோம். மற்றொரு வகை 'ஸ்லீப் மெயின்டனென்ஸ் இன்சோம்னியா' (Sleep Maintenance Insomnia). இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் படுத்து, உடனே தூங்கினாலும் அந்தத் தூக்கத்தில் அடிக்கடி விழிப்பு ஏற்படும். கழிவறைக்குச் செல்ல வேண்டியதாலும், கைகால்கள் மரத்துப்போவதாலும் இவர்களுக்குத் தூக்கம் கலைந்துகொண்டே இருக்கும்.

நோய் பாதிப்பு: ஸ்லீப் மெயின்டனென்ஸ் இன்சோம்னியா' வருவதற்கு முக்கியக் காரணம் 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி கால்கள் மரத்துப்போகும். காலை ஆட்டிக்கொண்டே இருப்பது, அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும் போன்ற உணர்வுகள் இவர்களுக்கு ஏற்படும். புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் தூக்கம் கெட்டுப்போகும். ரத்தச்சோகை, நீரிழிவு பிரச்னை, சிறுநீரகப் பாதிப்பு, மூட்டுவலி, முதுகுவலி , கைகால் வலி , முட்டிவலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' ஏற்பட்டு தூக்கமின்மை வரலாம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.

மூளை பாதிப்பு: இன்றைக்கு 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் காலையில் விழிக்கும்போது உடல் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களும் பொலிவற்று காணப்படும். அதன் தாக்கத்தால் அன்றைய பொழுதை தடுமாற்றத்துடன்தான் கடக்கமுடியும்.

மனநிலை பாதிப்பு: சிலர் இரவு போதுமான அளவு தூங்கினாலும் காலையில் புத்துணர்வாக உணர மாட்டார்கள். இதை 'அன்ரெஃப்ரெஷிங் ஸ்லீப்' (Unrefreshing Sleep) என்கிறோம். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்குத் தூக்கம் போதுமான அளவு இருந்தாலும் அது ஆழ்நிலை தூக்கமாக இருக்காது. இதுவும் ஒருவகையான இன்சோம்னியாதான். அன்ரெஃப்ரெஷிங் ஸ்லீப் பிரச்னை ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் 'குறட்டை'. தூங்கும்போது குறட்டைவிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு எவ்வளவுதான் தூங்கினாலும் காலையில் எழுந்தால் புத்துணர்வாக இருக்காது. குறட்டைவிடும்போது போதுமான அளவு ஆக்சிஜன் நம் உடலுக்குக் கிடைக்காது. இதனால் அன்ரெஃப்ரெஷிங் ஸ்லீப் ஏற்படுகிறது.

கவனச்சிதறல்: நாம் ஒருநாள் இரவு தூங்கவில்லை என்றாலே மறுநாள் காலையில் தலைவலி, கண்ணெரிச்சல், அசதி, கோபம், வேலையில் கவனச்சிதறல் எல்லாம் ஏற்படும். பகல் தூக்கமும் இரவு தூக்கத்தைப் பாதிக்கும் என்பதால் ஏற்கெனவே தூக்கப் பிரச்னை உள்ளவர்கள் பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது சிறந்தது. இரவு அதிக நேரம் டிவி, மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கமின்மை ஏற்படலாம். இரவு அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிக காரம் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ செரிமானக்கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவற்றாலோகூட தூக்கமின்மை ஏற்படும்.

தூக்கமும் ஜோதிடமும்: மனிதர்களுக்கு தூக்கம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் எப்படிப்பட்ட தூக்கம் என்பதை ஒருவர் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளே தீர்மானிக்கின்றன. சரியாக தூங்காவிட்டால் பாதிப்படைவது மூளைதான். மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்கு முக்கிய காரக கிரகமாகும். எந்த கிரகங்கள் சேர்க்கை ஒருவருக்கு மூளை கோளாருகள், மன அமைதியின்மை, கோமா நிலை போன்றவற்றையெல்லாம் புதனின் அசுப சேர்க்கைகள் ஏற்படுத்திவிடுகிறது. லக்னத்தில் மாந்தி, சந்திரனோடு மாந்தி, புதனோடு மாந்தி, சுக்கிரனோடு மாந்தி இவையெல்லாம் தூக்கத்தை சீரழிக்கும் கிரக சேர்க்கைகளாகும்.

சந்திரனின் அருள்: ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும்.அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும். இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மாணிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

சுக்கிரன் சுகம்: தூக்கத்தை தீர்மானிக்கும் மற்றொரு கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். நல்ல சுவையான உணவு, குளுமையான சூழ்நிலை, வசதியான படுக்கைகள், கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாக அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும். சுக்கிரன் நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்க்கு குறைவிருக்காது.

கர்மவினை: கர்ம வினைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாக கர்ம வினையை தெரிவிப்பவர் ஆவார். ஜாதகத்தில் லக்னம் கெட்டுப்போன நிலையில் எந்தகிரகம் எந்த சுகம் தந்தாலும் அது ஒட்டை பாத்திரத்தில் நிரப்பிய நீர் போன்று ஜாதகருக்கு பலனளிக்காமல் போய்விடும்.

12ஆம் பாவம்: தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோட்ச ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ஆம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ஆம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது.

பரிகாரம் என்ன: ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கு இணையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள். அமைதியான தூக்கத்திற்கான பரிகார ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் சில உள்ளன. கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும். கும்பகோணத்திற்கருகில் உள்ள திங்களுர், திருப்பதி மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை திங்கள் பரிகார ஸ்தலங்களாகும். கஞ்சனுர், ஸ்ரீரங்கம், மற்றும் மயிலாப்பூர் அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயங்கள் சுக்கிரன் பரிகார ஸ்தலங்களாகும் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வணங்கி வர தூக்கப்பிரச்சினை நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+