Rasi Palan This Week: மீன ராசிக்கு தொழிலில் கொட்டும் லாபம்.. அடுத்தடுத்து வரும் ஜாக்பாட் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பதட்டம் அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களிடம் இருந்து விலகி பாதுகாப்புடன் இருப்பது நல்லது. சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது தவிர்ப்பது நல்லது.
தொழிலில் ஏற்றம்
தொழிலில் ஏற்படும் ஏற்றங்கள் நம்பிக்கையைப் பெற்றுத் தரும். மன அழுத்தங்கள் படிப்படியாகத் தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும். வாகன அமைப்பு கைகொடுக்கும். உத்தியோகத்தில் அனுகூலம் காணப்படும். அலர்ஜி, ஒவ்வாமை, தோள்பட்டை வலி, ஜாயிண்ட்களில் வலி போன்றவற்றில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மாற்றம், முன்னேற்றம்
தலைமுறைகள் விஷயத்தில் பிரச்சனைகள் காணப்படுவதால் குலதெய்வத்தை மானசீகமாகப் பிரார்த்தனை செய்து கொள்வது யோகத்தைப் பெற்றுத் தரும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. தொழில் ரீதியாக நல்ல ஏற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்துவித நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
வழிபாடு
திடீர் முடிவுகள் ஆச்சரியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வாகனங்களில் செல்லும்போதும், இரவு நேர பயணங்களின்போதும் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களை மேற்கொள்பவர்கள் சிதறு தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டு விட்டு செல்வது நன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications