Meenam Rasi Palan: மீன ராசிக்கு பெயர் கெடும் சூழல்.. இந்த விஷயங்களை எல்லாம் பண்ணாதீங்க
Meenam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Meenam Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் நன்மைகளும், சந்தோஷமும் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடு பொடியாகும். நிறை. விரயங்கள் ஏற்படும் என்பதால் அவற்றை சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
தொழிலில் ஏற்றம்
சனிக்கிழமை தோறும் மதியம் 1 மணி முதல் 2 மணிக்கு உணவு தானமாகக் கொடுப்பது பெரிய பிரச்சனைகளில் இருந்து உங்களை பரிபூரணமாக காக்கும். உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. கழிவுப் பாதையில் சிறிய உபத்திரவங்கள் கூட பெரிதாகக்கூடிய வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் கிட்னி, கால் முட்டி, மறைமுகமான இடங்கள், மருத்துமனையில் அனுமதியாவது, ஊரை விட்டு வெளியில் செல்வது, நாட்டை விட்டு செல்வது போன்ற நிலைமைகள் உண்டாகும். இது நேர்மறையாக நடக்கவும் வாய்ப்புள்ளது. திட்டமிட்டு செய்யும் விஷயங்கள் எல்லாவற்றிலும் வெற்றி ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீட்டில் இருப்பவர்களை கூப்பிட்டு வைத்து பஞ்சாயத்து போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
பெயர் கெடும்
ராசி லக்னத்தில் சனி இருப்பதால் வெளியில் பேசி விட்டால் சந்தோஷம் என்று நினைப்பீர்கள். ஆனால், அதனால் உங்கள் பெயர் கெடும் சூழல், நம்பிக்கை கெடும் சூழல் ஏற்படும். சனி திரிகோணத்தில் அமரும் சூழல் உள்ளதால் எதற்கு செய்தோம் என்று வருத்தப்படும் சூழல் ஏற்படும். வீட்டில் பெரியவர்கள் காணாமல் போகும் சூழல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
வழிபாடு
சுபிக்ஷம் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம். புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். பெரிய முதலீடுகள் ஏற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். எல்லா விதத்திலும் பெரிய ஏற்றம் உண்டாகும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேது வழிபாடு செய்வது, கோளார் பதிகத்தை கேட்பது சங்கடத்தை பரிபூரணமாக நிவர்த்தியாகும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதாரத்தில் 60 சதவீதமும் ஏற்றம் உண்டாகும்.
-
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications