மீன ராசியை வச்சு செய்யும் ஜென்ம சனி.. செவ்வாய் பகவானால் பணம் கொட்டப் போகுது.. கோபம் வேண்டாம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது மீனம் ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
மீனம் ராசி
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் 7 ஆம் இடம் எனும் திருமணம், கூட்டாளி ஸ்தானத்தில் சென்று அமர்கிறார். செவ்வாய் உங்களுக்கு 2க்கு உரியவர். தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தின் அதிபதி. உங்களுக்கு 9க்கு உரியவர். பாக்கியத்தை தரக்கூடியவர். தற்போது 7 ஆம் இடத்தில் அமர்ந்து உங்களுக்கு பாக்கியத்தை கொடுக்கப் போகிறார். இதுவரை சந்தித்து வந்த குழப்பங்கள், பிரச்சனைகள், பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
கோபம் வேண்டாம்
இந்த செவ்வாய் பெயர்ச்சி காரணமாக கணவன், மனைவிக்கு வருமானம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள், பண வரவு உண்டாகும். செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் பணவரவு, பாக்கியம் உண்டாகும். ஆனால் ராசியிலேயே சனி அமர்ந்திருப்பதால் எரிச்சல் ஏற்படும். கோபம், ஆக்ரோஷம் மிகவும் அதிகமாக ஏற்படும். முடிவுகளை எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜென்மசனியும் இருப்பதால் மன சங்கடம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கோபத்தை தவிர்ப்பது நல்லது. சிறிய விஷயங்கள் கூட பெரிதாகும் வாய்ப்புள்ளது.
பண வரவு அதிகரிக்கும்
வேலை, குடும்பம், உறவு, நண்பர், காதல் விஷயங்களில் கோபத்தை தவிர்க்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 2 ம் அதிபதி 7 ஆம் இடத்தில் வந்து ராசியைப் பார்ப்பதால் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பணத்தை கையாளும்போது கவனம் தேவை. அதீத செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கணக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
மாற்றங்கள் உண்டாகும்
பாக்கியாதிபதி தனக்கு 11 ஆம் இடத்தில் அமர்வதால் பாக்கியம் சார்ந்த விஷயங்களில் நன்மைகள், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம். இடமாற்றம் போன்ற நல்ல மாற்றங்கள் ஏற்படும். அவசரப்பட்டு வேலையை விடாமல் இருப்பது நல்லது. எங்கு சென்றாலும் உங்களுக்கு திருப்தியில்லாத நிலை ஏற்படும். மனம் சஞ்சலப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
காதல்
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரியனின் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிப்பதால் அரசு, அதிகாரம், நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனைத்துவித நன்மைகளும் உண்டாகும். ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிப்பதால் காதல் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். ஏற்கனவே காதலிப்பவர்களுக்கு சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படும். விளையாட்டு, கலைத் துறையில் நாட்டம் அதிகரிக்கும். தாய் ஆரோக்கியத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
பாக்கியங்கள்
செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரை செவ்வாய் சொந்த நட்சத்திரத்தில் பயணிப்பதால் தனம் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் புதிய உறவு வரும். சகோதர சகோதரிகளுக்கு நல்ல வேலை, திருமணம் நடக்கும். பூமி, இடம், நிலம் சார்ந்த விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். ராணுவம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். நல்ல பாக்கியங்கள் கிடைக்கும். நினைத்துப் பார்க்காத நல்ல விஷயங்கள், மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம் உண்டாகும். நல்ல பாக்கியம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
Kanni: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. வாயில தான் கண்டமே -
Simmam Rasi Palan: "குறி வச்சா இரை விழும்".. சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு வீடு, நிலம்னு செட்டிலாகும் யோகம்.. கவர்ன்மென்ட் வேலை கன்ஃபார்ம் -
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட் -
Rishabam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் அற்புதமான முன்னேற்றம் -
Mesham Rasi Palan: மேஷம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. இந்த வார பலன்கள்.. முழு விவரம் -
Kumbam: கும்ப ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications