Rasi Palan This Week: மேஷ ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்?.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள், அனுகூலங்கள் அனைத்தும் ஏற்படும் அற்புதமான காலகட்டம். இதுவரை இருந்து வந்த மனம் சார்ந்த, பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும்.
சுபகாரியம்
சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டம். அதன் மூலமாக சந்தோஷமும், அனுகூலமும் பெறுவீர்கள். இந்த வாரத்தைப் பொறுத்தவரை ராஜபதவிகள் தேடி வரும். கோவில்கள், பூஜைகள், புனஷ்காரங்கள், பெரிய பதவிகள், தானதர்மங்கள், பேராசிரியராகும் வாய்ப்பு, அப்பாவின் சொத்துக்கள் கிடைப்பது போன்ற பாக்கியங்கள் கிடைக்கும்.
தடைகள் நீங்கும்
நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவது, கோயிலில் முதல் மரியாதை கிடைக்கும். பயணங்களில் இருந்து வந்த தடைகள், தாமதங்கள் விலகும். பல பிரச்சனைகள் நீங்கிச் செல்லும். பலவிதமான ஏற்றங்கள் கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். பணம், பொருளாதாரத்துக்கு பஞ்சம் இருக்காது.
கவனம்
இன்பச் சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். பயணங்களில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத கோபம், தேவையில்லாத மயக்கம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தந்தையின் ஆரோக்கியத்தில், இதயம், கால் பாதம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மிகுந்த கவனம் தேவை. தெய்வ அனுக்கிரகம் உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
சளி தொந்தரவுகளில் மிகுந்த கவனம் தேவை. குலதெய்வ வழிபாட்டை தவறாமல் கடைப்பிடிப்பது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவுகள் கொடுப்பது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.
-
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications