மேஷ ராசிக்கு 4 கிரகங்களின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

mesham-rasi-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-aries-people-during-this-march-month

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதத்தில் ராசிக்கு 10 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் இருக்கின்றன. லாபத்தைக் கொடுக்கக்கூடிய இடத்தில் 4 கிரகங்களின் சேர்க்கை. 12 இல் ஏராளமான கிரகங்கள் இருக்கின்றன. மேஷ ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ஆம் அதிபதியும், கர்மகாரகனான சனியும் ஓரிடத்தில் இணைந்து நன்மையைத் தரக்கூடிய காலமாக இருக்கும்.

புதிய முயற்சிகள்

2 க்கும் 7க்கும் உடைய சுக்கிர பகவான் 12 ஆம் இடத்தில் உச்சமடைந்துள்ளதால் நல்ல பலன்கள் கிடைக்கும். 22 ஆம் தேதி வரை 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சரிக்கப் போகிறார். குருவின் பார்வையில் சஞ்சிரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.

வெளிநாடு யோகம்

தொழிலில் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் காலகட்டமாக இருக்கும். புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் யோகம் உண்டாகும். பயணங்கள் அதிகரிக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும் அற்புதமான அமைப்பு உள்ளது. 12 ஆம் இடம் என்பது உங்களை முதலீடு செய்யக்கூடிய இடம். அயல்நாட்டு யோகம் உண்டாகும்.

சுக்கிரன் அருள்

இதுவரை எந்த காரியத்தை செய்தாலும் அதில் ஒரு தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அந்தப் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி குடும்பத்தில் அந்நியோன்யம் உண்டாகும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் திருமண வரன் உண்டாகும். நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். நிறைய புதிய விஷயத்தை கற்றுக் கொள்வீர்கள்.

குரு பார்வை

உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்வீர்கள். 2ம் அதிபதி உச்சமாக இருப்பதால் நல்ல பண வரவு உண்டாகும். 7 ஆம் இடத்துக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கும். புதிய அத்தியாயத்தை தொடங்குவீர்கள். சனியும், சூரியனும் இணைந்து மீனத்தில் இருப்பது, லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை விழுவது சகல விதத்திலும் நன்மைகளை ஏற்படுத்தும்.

புதன் வக்கிரம்

சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளை எழுதுவீர்கள். அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நிறைய மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். கடன் வாங்கி நிறைய நல்ல விஷயங்களை மேற்கொள்வீர்கள். புதன் வக்கிரமாக இருப்பதால் உங்களக்கு நிபுணத்துவம் கிடைக்கும். எதை செய்தால் சரியாக இருக்கும் என்கிற தெளிவு கிடைக்கும்.

கவனம்

உங்களைப் பற்றி புறம் பேசுபவர்களிடம் தள்ளி நிற்பது நல்லது. போட்டிகளும், பொறாமைகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கண், பல் சார்ந்த பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும். நெகட்டிவாக வரும் எந்தப் பேச்சுக்கும் செவி சாய்க்காமல் இருப்பது நன்மை பயக்கும். முதல் 15 நாட்கள் அமைதியாக இருப்பது நல்லது. நிறைய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+