சிம்ம ராசிக்கு ஆடி மாதத்தில் வரும் சிக்கல்.. விரையங்கள் அதிகமாவதால் ஜாக்கிரதை
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் சிம்ம ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விசேஷமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ வழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலாகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது நல்ல நன்மையையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அம்மனுடன் சேர்ந்து குரு வழிபாட்டையும் சேர்த்து செய்வது பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சந்தோஷங்கள் இரட்டிப்பாகும். விரையங்கள் அதிகமாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். விலையுயர்ந்த பொருள்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
தானம்
திங்கள்கிழமை மதிய வேளைகளில் சாதமும், எலுமிச்சை ஊறுகாயும் ஏழைகளுக்கு தானமாக அளித்தால் அனுகூலம் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், உங்களுடைய துணை உள்ளிட்ட விஷயங்களில் எந்தவித பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் எந்தப் பிரச்சனை வந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சமாதானமாக செல்லவில்லை எனில் பெரிய மன அழுத்தத்திற்கு கொண்டு செல்லும்.
தொழில்
தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. இல்லையெனில் தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதீத அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்கள், கூடா நட்புகளால் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அவர்களுடைய பேச்சை கேட்டு உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
உடற்பயிற்சி கட்டாயம்
தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சோம்பல் அதிகரிக்கும் காலகட்டம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சோம்பலைத் தவிர்த்து எடுத்த முயற்சிகளில் தீவிரமாக இருப்பது நல்லது. உங்கள் மீது அக்கறை கொண்டவர்களை அரவணைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள், பாதிப்புகள் தீரும்போது மனதில் இருந்து வந்த பாரங்கள் குறையும்.
ஆதாயம்
வேற்று மொழித்தவர்களால் அதிக அளவில் ஆதாயதத்தைப் பெறுவீர்கள், உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணத்தை மேற்கொள்வதால் மிகப்பெரிய நிம்மதி உண்டாகும். பயணங்களால் மேன்மை அடையும் காலகட்டமாக இருக்கும். அரசுத் துறையில் இருப்பவர்கள் திடீர் முடிவு எடுப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். கூட்டுத் தொழில், மற்ற தொழில் இருப்பவர்களும் லாபம், அனுகூலத்தைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.
-
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications