தடை அதை உடை.. மிதுன ராசிக்கு ஏற்றங்களை கொடுக்கும் நவம்பர் மாதம்
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் மிதுன ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
மிதுனம்
மிதுனம் ராசி மற்றும் மிதுனம் லக்னத்தினருக்கு இந்த மாதம் அருமையாக இருக்கும். ராசி அதிபதி புதன், சுக்கிரனுடன் இணைந்திருக்கிறார். கிட்டத்தட்ட மாதம் முழுவதுமே புதன் நல்ல நிலையில் தான் இருக்கிறார். சுப கிரகமான சுக்ரனுடன் இணைந்திருப்பது கூடுதல் நற்பலன்களை தரும். லட்சுமி நாராயண யோகம் கிடைப்பதால் சொந்த வீடு, நிலம், ஆடை, ஆபரணம் உள்ளிட்ட சொத்து சேர்க்கை இருக்கும்.
பண வரவு
ஐந்தாம் இடமான இஷ்ட தெய்வம், குல தெய்வம் இடத்தில் ராசி அதிபதி உள்ளார். இதனால் கடவுளின் ஆசிர்வாதம் நிச்சயம் உண்டு. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு நிச்சயம் உண்டு. சீரான பணப்புழக்கத்தால் பொருளாதாரம் ஏற்றமடையும். கடந்த காலங்களில் இழந்த பெயர், புகழ், அந்தஸ்து, பணம், சொத்து எல்லாவற்றையும் மீட்டெடுக்கும் மாதமாக இருக்கும்.
தைரியம்
இழுபறியாக இருந்த காரியங்கள் நிவர்த்தியாகி, மனதில் நினைத்தவை ஒவ்வொன்றாக நடைபெறும். நிதி, வழக்கு காரணமாக நின்றிருந்த வீட்டு கட்டுமான பணிகள் மீண்டும் நடைபெறும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி உடல்நலன் சிறப்பாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்து எதிலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று துணிந்து இறங்கி வெற்றி பெறுவீர்கள்.
ஆதாயம்
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடியான மாற்றங்கள், சிலருக்கு நல்ல உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களின் எதிரிகளை வீழ்த்தி தடம் பதிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை நிறைவேற்ற இது சரியான காலம்.
கவனம்
உங்கள் ராசி அதிபதி இடையில் சில நாட்கள் வக்ர நிலை அடைவார். எனவே கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மனதில் மாறுபட்ட சிந்தனைகள் ஓடும். எனவே தெளிவாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். உங்கள் வீட்டு அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications