Rasi Palan This Week: அடித்து ஆடப்போகும் மிதுன ராசி.. தொழில் மிகப்பெரிய உச்சம்
வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரமாக இருக்கும். மற்றவர்களிடம் வேலைக்குச் செல்வதை தவிர்த்துவிட்டு சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
சமுதயாத்திலும், குடும்பத்திலும் கொடுத்த வாக்கை காப்பற்றக் கூடிய நல்ல காலகட்டம். இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து நல்ல மாற்றங்களும் ஏற்படும். அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். நல்ல நேரம் அடிவயிறு, கழிவுப் பாதையில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்வது நல்லது.
தொழிலில் ஏற்றம்
ரத்த அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது உங்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த வழக்குகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் நடைபெறக்கூடிய சாத்திக்கூறுகள் உள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவது, வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. நிதானமாக செயல்பட வேண்டும்.
வெற்றி மேல் வெற்றி
எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். செல்வாக்குகள் குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கூடும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களைச் செய்வீர்கள். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் எல்லாம் உங்களுக்கு யோகத்தையும், பெரிய நம்பிக்கையைும் ஏற்படுத்தும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஞானமார்க்கத்திற்கு எந்தவித குறைவும் இருக்காது. விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குரு வழிபாடு, மகான்கள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ராகவேந்திரர் வழிபாடு நன்மைகளைத் தரும். பலத்தையும், சந்தோஷத்தையும் உங்களுக்கு தரும்.












Click it and Unblock the Notifications