Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. மிதுன ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் 3 கிரகங்கள்
Mithunam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கைகூடும். பணம், பொருளாதாரத்தில் மிகப்பெரிய வெற்றிகள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. மனம், உளவியல் ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குரு பார்வையில் சுக்கிரன், புதன் அமர்ந்திருக்கிறது. வண்டி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
கொட்டும் யோகம்
வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம், பெரிய மனிதர்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். பெயர், புகழ், பாராட்டு, சான்றிதழ் பெறும் யோகம் உண்டாகும். திருமண வரன் அமையும், திருமண யோகம் உண்டாகும். நிறைய நட்பு வட்டாரங்களைச் சென்று பார்ப்பது, இன்ப சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் இருப்பதால் கால், பாதம், வயிறு சார்ந்த பிரச்சனைகள், வீட்டில் உள்ளவர்களுக்கு சர்ஜரி நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
கவனம்
இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி எந்தவிதமான பாதிப்பும் உள்ளது. பிள்ளைகள், பேரக்குழந்தைகள் நன்றாக இருப்பார்கள். குடும்பத்துடன் சுபகாரியங்களுக்குச் சென்று வருவீர்கள். லட்சுமி நாராயண பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
அனுகூலம்
எல்லா விதத்திலும் அனுகூலங்கள் காணப்படும். சட்டத்திற்குப் புறம்பானவர்களுடைய தொடர்புகளைத் தவிர்ப்பது நல்லது. நடுக்கம், ரத்த அழுத்தம், தலைசுற்றல் போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை ஓட்டும்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மையைத் தரும். யாரிடமும் எந்தப் பிரச்சனைக்கும் செல்லாமல் இணக்கமாக இருப்பது நல்லது.
பிரச்சனை தீரும்
துணை, உறவினர்கள், பிள்ளைகள், பூர்வீகத்தில் இருக்கும் சொத்து பிரச்சனை போன்றவை நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். செல்வாக்குகள் கூடும். துணை விஷயத்தில் மனம் விட்டுப் பேசுவீர்கள், குடும்பத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். துணையின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.












Click it and Unblock the Notifications