September Matha Palan: மிதுன ராசிக்கு குவியும் சொத்துகள்.. பெண்ணால் வரப்போகும் ஆபத்து.. ரொம்ப கவனம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
இந்த செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்
மிதுனம்
மிதுன ராசி, லக்கினக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் நடக்கும். வெற்றிகள் கைகூடும். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் ஆட்சி பொறுப்பில் அமரும் வாய்ப்பு வரும். தேவையில்லாத வாக்குவாதங்கள், சிக்கல்கள் போன்றவை சரியாகும். தோல் பட்டை, கழுத்து சுழுக்கு, நரம்பு பாதிப்பு, காது பிரச்சனை, வண்டி, வாகனங்களில் சிறிய விபத்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சொத்துகள் குவியும்
இளைய சகோதரன், சகோதரிகள் வாழ்க்கையில் பிரச்சனை, அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த மாதத்தில் பெண்ணால் பெயர் கெடும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்துகள் கைக்கு வரும். உங்களுடைய துணையின் சொத்துகள் வந்து சேரும்.
குரு, செவ்வாய் இணைவு
பெரிய சந்தோஷம், பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும் காலகட்டம். நெஞ்சு, மார்பு, இடுப்பு வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. பெரிய பாதிப்புகள், நஷ்டம் எதுவும் ஏற்படாது. குரு, செவ்வாய் இணைந்துள்ளதால் எந்த பதவிக்காக, எந்த பொறுப்புக்காக காத்திருக்கிறீர்களோ அவை எல்லாம் கிடைக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். தெய்வ அனுகூலத்தால் அற்புதமான மாதமாக இருக்கும்.
மகிழ்ச்சி
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 75 சதவீத நன்மைகளும் கிடைக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications