For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுவதும் நவராத்திரி கோலாகல தொடக்கம்.. சக்தியை பூஜை செய்து தானம் கொடுத்தால் என்னென்ன பலன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மைசூருவில் தசரா என்றும் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படும் பண்டிகை தமிழகத்தில் வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முடிந்து மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்கள் கொண்டாடப்படும் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பத்து நாட்களும் கோவில்களில் மட்டுமல்ல வீடுகளிலும் பண்டிகைக்கோலம்தான்.

வீடுகளை அலங்கரித்து கொலு வைத்து அம்மனை கொண்டாடுவார்கள். முப்பெரும் தேவியர்களான கலைமகள், மலைமகள், அலைமகளின் அருட்கடாட்சம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்திருக்கும்.

 நவராத்திரி விழா..கேரளாவிற்கு அம்மன் சிலைகள் ஊர்வலம்..பத்மநாபபுரம் அரண்மனையில் கைமாறிய உடைவாள் நவராத்திரி விழா..கேரளாவிற்கு அம்மன் சிலைகள் ஊர்வலம்..பத்மநாபபுரம் அரண்மனையில் கைமாறிய உடைவாள்

புராணங்களில் நவராத்திரி

புராணங்களில் நவராத்திரி

நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளை பெற்றார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

ஒன்பது நாட்கள் சக்தி பூஜை

ஒன்பது நாட்கள் சக்தி பூஜை

சிவனை வழிபட ஒரு ராத்திரி சிவராத்திரி இது மாசி மாதம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றோம். சக்தியை வழிபட ஒன்பது ராத்திரி நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவம் என்பது ஒன்பது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாதான். இது அம்மனுக்கு 9 நாட்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம். இந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி இன்று முதல் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது அக்டோபர் 5ஆம் விஜயதசமியுடன் பண்டிகை முடிகிறது.

 எத்தனை நவராத்திரிகள்

எத்தனை நவராத்திரிகள்

நவராத்திரி பண்டிகை நான்கு காலங்களில் கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

 சாரதா நவராத்திரி

சாரதா நவராத்திரி

நான்கு நவராத்திரிகளில் சாரதா நவராத்திரி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கொண்டடப்படுகிறது. வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும் வாராஹி நவராத்திரியும் சியாமளா நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி கொண்டாடப்படும் நாட்களில் தினமும் பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவார்கள். எந்தப் பொருட்களைத் தானமாக வழங்குகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு எந்தக் காலத்திலும் எப்போதும் எவரிடமும் கையேந்தத் தேவையில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எந்தந்த நாளில் என்ன மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கலாம் என்றும் தாத்பரியம் தெரிவிக்கிறது.

தானம் கொடுங்கள்

தானம் கொடுங்கள்

பிரதமை திதியில் பூஜை துவங்கும் போது, வீட்டுக்கும் பூஜைக்கும் வரும் பெண்களுக்கு கூந்தலை அலங்கரிக்கத் தேவையான எண்ணெய், மலர்கள், ஹேர் பின், ரிப்பன் முதலான பொருட்கள் மற்றும் புத்தாடையுமாக வழங்க வேண்டும். துவிதியை நாளில் குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை ஆடையுடன் சேர்த்துத் தருவது நல்லது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். திருதியை நாளில், கண்ணாடி, மஞ்சள், கண் மை ஆகியவற்றை உடையுடன் சேர்த்து தானமாக வழங்கவேண்டும். இவற்றை வழங்குவதால், காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும்.

கல்யாணம் கை கூடி வரும்

கல்யாணம் கை கூடி வரும்

ஏழாம் நாள் சப்தமி திதியில், பெண்களுக்கு புத்தாடையுடன் ஏழு மங்கலப் பொருட்களை ஆடையுடன் சேர்த்துக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. அஷ்டமி திதியில், எட்டு விதமானப் பொருட்களை புத்தாடையுடன் வழங்குவது சிறப்பு. அந்தக் காலத்தில் யானைக்கு தேங்காய் பழங்கள் கொடுத்து, நமஸ்கரிப்பார்களாம்.

மங்கலப்பொருட்கள் தானம்

மங்கலப்பொருட்கள் தானம்

ஏழாம் நாள் சப்தமி திதியில், பெண்களுக்கு புத்தாடையுடன் ஏழு மங்கலப் பொருட்களை ஆடையுடன் சேர்த்துக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. அஷ்டமி திதியில், எட்டு விதமானப் பொருட்களை புத்தாடையுடன் வழங்குவது சிறப்பு. அந்தக் காலத்தில் யானைக்கு தேங்காய் பழங்கள் கொடுத்து, நமஸ்கரிப்பார்களாம்.

கல்வி சிறக்க தானம் கொடுங்கள்

கல்வி சிறக்க தானம் கொடுங்கள்

நவமி ரொம்ப விசேஷம். தேவ குதிரை பிறந்தநாள் என்கிறது புராணம். ஆதிகாலத்தில், வெள்ளைக் குதிரைக்கு கொள்ளு கொடுப்பார்கள். மாணவர்களுக்கு புத்தகங்கள், பேனா, புத்தாடைகள் வழங்கலாம். சந்ததி சிறக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தசமி நாளில், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி நூல்களை ஆடையுடன் சேர்த்து வழங்க நம்முடைய வாரிசுகளில் கல்வி வளம் பெருகும். எனவே நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் இந்த நாட்களில் மறக்காமல் தானம் கொடுங்கள் நல்லது நடக்கும்.

English summary
The Sharatha Navratri begins after Mahalaya Amavasya in the month of Purattasi during Shukla Paksha. This year, Navratri celebrations will start on September 26th 2022. Dedicated to the feminine power and the nine forms of Goddess Durga, Navratri is one of the most significant festivals in the Hindu calendar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X