புத்தாண்டு ராசி பலன் 2026: அடுத்தடுத்து காத்திருக்கும் ஆச்சரியம்.. மீனம் ராசிக்கு பொன்னான வாய்ப்பு
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
மீனம் (Meenam new year rasi palan):
மீனம் ராசிக்கு ராசியிலேயே சந்திரன் இந்த ஆண்டு முழுவதும் இருக்கிறார். 4 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் மே மாதத்திற்கு 5 ஆம் இடத்திற்குச் சென்று ராசியைப் பார்க்கிறார். ராசிக்கு 9, 11 ஆம் இடத்தைப் பார்க்கிறார். ராசிக்கு 6 ஆம் இடத்தில் கேது, 12 ஆம் இடத்தில் ராகு இருக்கிறார். 12 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் ஏற்கனவே இருப்பவர்களுக்கு பிஆர் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு
பிஆர் இல் இருப்பவர்களுக்கு சிட்டிசன்ஷிப் கிடைக்கும். இருக்கின்ற வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்குச் செல்லும் யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் யோகம், புதிய கலையை கற்றுக்கொள்ளும் யோகம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். எந்தப் பிரச்சனை இருந்தாலும் யாராவது ஒருவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
குரு பார்வை
குரு பார்வை ராசியின் மேல் இருந்தால் குறிப்பாக 9 ஆம் பார்வையாக இருந்தால் உங்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் யாராவது ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். 5 ஆம் பார்வையாக குருவே 5 ஆம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏற்கனவே இருந்த கடைகள் ஒவ்வொன்றாக தீரும். பார்ட்னர்களுக்குள் வருமானம் நன்றாக இருக்கும்.
பிரபலமடைவீர்கள்
சோஷியல் மீடியாக்களில் பிரபலமாகும் யோகம் உள்ளது. அனைத்து முயற்சி, அனைத்து வேலையையும் தள்ளிப் போடுவீர்கள். பணம் திருட்டுப் போவதற்கான வாய்ப்புள்ளது. அதிக உழைப்பு ஏமாற்றப்படும். சிறிய பிரச்சனைக்காக வேலையை விடும் சூழல் ஏற்படும். தனிமை எண்ணம் அதிகரிக்கும். அப்பாவிற்கு இந்த சமயத்தில் மருத்துவச் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
சனி சந்திரன் சேர்க்கை கோச்சாரத்தில் வரும்போது தாய், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரும். படிப்பில் கவன சிதறல்கள் ஏற்படும். போதைப் பழக்கம் ஏற்படும். பல வருட உழைப்பு வீணாகப் போகும். வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. அப்படியே கொடுத்தாலும் அதை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை












Click it and Unblock the Notifications