Puthandu Palan 2026: துலாம் ராசிக்கு கொட்டும் பணம்.. விபத்துகளுக்கு வாய்ப்புள்ளதால் கவனம்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் (Thulam new year rasi palan):
துலாம் ராசிக்காரர்களே இந்தப் புத்தாண்டு உங்களக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிரபலங்களுடன் தொடர்புகள், அறிமுகம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவாக முடிவெடுத்தால் அற்புதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
ஏமாந்துறாதீங்க
8 ஆவது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சல்கள் இருக்கும். பயணங்கள் ஏற்படும். பணம் கொடுத்து ஏமாறும் சூழ்நிலை உள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பழைய வண்டி வாகனத்தைப் பார்த்து பயன்படுத்துவது நல்லது. ஜாமீன், கேரண்டி கையெழுத்துப் போடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லா வகையிலும் கவனமாக இருப்பது நல்லது. இனிமையாகப் பேசும், புகழ்ந்து பேசும் நபர்களிடம் இருந்து தள்ளி நிற்பது நல்லது.
பணவரவு சூப்பர்
புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3 வது வீட்டில் 4 கிரகங்கள் இருப்பதால் இந்த ஆண்டு பிறப்பதால் 4 ஆம் இடத்தில் வருமானம் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொடர்ந்து நிலையான வருமானம் இல்லை என்கிறத சூழல் ஏற்படும். குரு பகவான் உங்களுக்கு மே மாதம் வரை சாதகமாக 9 ஆம் வீட்டில் இருப்பதால் பண வரவு, செல்வாக்கு அதிகரிக்கும்.
கவனம் தேவை
ஜூன் மாதம் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரைக்கும் 10 வது வீட்டில் வந்து அமருவதால் வேலை மாறுவது, வேலை கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளதால் உத்தியோகத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அக்டோபர் 14 முதல் டிசம்பர் மாதம் வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமருவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். லாபத்தில் அதிகளவில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
ஜெயம் உண்டாகும்
சனி பகவான் உங்களுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுப்பதால் எல்லா விஷயங்களிலும் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாத குணங்கள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். 8 ஆம் இடத்தில் செவ்வாய் மறைவதால் ஜூன் மாதம் 20 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை வாகன விபத்துகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
மார்ச் மாதத்தில் இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. அழகு, இளமை கூடும். ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆதரவற்ற முதியோர்களுக்கு துணி, கம்பளி, போர்வை வாங்கிக் கொடுப்பது நல்லது. பாசிப்பயறு தானம் கொடுப்பது நன்மை பயக்கும்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications