ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2022: கல்யாண யோகம் யாருக்கு கைகூடும்...யாருடைய வீட்டில் தொட்டில் ஆடும்
2022 புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: 2022 புத்தாண்டு பிறந்து விட்டது. நோய்களும் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்திலும் யாருக்கு சுப காரியம் நடைபெறும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று பார்க்கலாம். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கிறது என்று பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன.
காசு பணம் கைநிறைய சம்பாதித்தாலும் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். சிலருடைய வாழ்க்கை போர்க்களமாக இருக்கும். இந்த ஆண்டு அமைதியும் சந்தோஷமும் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
பிள்ளைகளால் நிம்மதியிழந்து தவிர்ப்பவர்களுக்கும், புத்திரபாக்கியத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு குருவின் ஆசியால் இந்த 2022ஆம் ஆண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். துலாம்,விருச்சிகம், தனுசு,மகரம், கும்பம்,மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் ஆசியோடு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மன நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த ஊடல்கள் நீங்கும். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு குடும்பத்தினர் அனுமதியோடு திருமணம் கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் செலுத்துவது அவசியம். மன அழுத்தம் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். பொற்காலமான ஆண்டாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு 2022ஆம் ஆண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையேயான அன்பும் அன்னியோன்னியமும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழத் தொடங்குவீர்கள். குரு பகவானின் அருளாலும் குருவின் பார்வையாலும் குழந்தை பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளால் நல்லதொரு செய்தி தேடி வரும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி இந்த ஆண்டு முதல் மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த நல்லதொரு ஆண்டாக அமைந்துள்ளது.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு சுபத்துவம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. உங்களுடைய திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. தடைகள் ஏற்பட்டு வந்த திருமண சுபகாரியங்கள் இந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவேறும். கடந்த சில ஆண்டுகாலமாகவே கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். குடும்பத்திற்குள் புதிய வரவாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். மழலைச் செல்வம் மடியில் தவழ தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புது வீட்டிற்கு இடமாற்றம் உண்டாகும். வித்தியாசமான முடிவுகளை எடுப்பீர்கள். ஜென்ம சனி விலகுவதால் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து இணக்கமாக செல்வீர்கள். உங்களின் பொருளாதாரம் இந்த ஆண்டு நன்றாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. சுப காரிய தடைகள் விலகும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சுக்கிரன் அருளால் இல்லற வாழ்க்கை இனிமையானதாக அமையும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நன்மையைத் தரும்.

கும்பம்
2022 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்திற்காக இந்த ஆண்டு நிறைய நேரம் செலவு செய்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிலும் யோசித்து செய்வது நல்லது. தன லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடும் சேமிக்க முடியாத அளவிற்கு சுப செலவுகள் வரும். கஷ்டங்கள் இல்லாத ஆண்டாக அமையும். மனதளவில் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். குழந்தைகள் விசயத்தில் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வீர்கள். 2022ஆம் ஆண்டு சாதனைகள் நிறைந்த ஆண்டாக அமையும். வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்க மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சென்று மனதார வணங்குங்கள்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு என அமர்வது வெற்றியைத் தரும், ஆரம்பமே அமர்களம் என்பது போல உள்ளது. சனிபகவானும் சாதகமாக இருக்கிறார். உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். பேச்சில் கவர்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதியருக்கு இடையே அன்பும் நேசமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்தி தேடி வரும். குழந்தை பாக்கியம் கை கூடி வரும். திருமணத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் திருமண யோகம் கை கூடி வரும். இந்த ஆண்டு நீங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications