புத்தாண்டு ராசி பலன் 2023: இந்த ராசிக்காரர்கள் மறந்தும் சில தவறுகளை செய்யாதீர்கள்..சங்கடம் வருமாம்
சென்னை: 2023ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சில நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும். சில எண்கள் சாதகத்தை தரக்கூடும். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் என்ன நிறங்கள் சாதகமாக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களுக்கும் சாதகமான நிறங்கள் உள்ளன. நவ கிரகங்களுக்கு சாதகமான எண்கள் உள்ளன. அந்த நிறங்களும் எண்களும் சிலருக்கு வெற்றியைத் தேடித்தரும். நம்பிக்கையையும் தைரியத்தையும் தரக்கூடும்.
செவ்வாய், சுக்கிரன்,புதன், சந்திரன் ஆதிக்கம் நிறைந்த மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் வெற்றியை தக்க வைக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை பளிச்சிடும். சனியும், குருவும் சாதகமாக உள்ளது. சூரிய பகவான், சுக்கிரனின் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. 2023ஆம் ஆண்டு நிலம் சார்ந்த தொழில் சிறப்படையும். அரசியல் அரசாங்க துறையில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். மருத்துவ துறை, உணவு தொடர்பான துறைகள், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், மருத்துவ துறை தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கெமிக்கல் துறை தொடர்பான வேலை செய்பவர்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதமான பலன்களை தரப்போகிறது. சனி பகவானின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கிறது. சனிக்கிழமை நீல நிற உடை அணிந்து சனி பகவானை வணங்கலாம். ஏழ்மை நிலை, கடை நிலை ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீலம், சிவப்பு, மெரூன் கலர் உங்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக உள்ளது. எந்த ஒரு நல்ல காரியங்களுக்கு செல்லும் போதும் நீல கலரை அதிகம் பயன்படுத்துங்கள். இந்த ஆண்டு உங்களின் ராசியான எண் 8.
சனியின் அருளால் செல்வம் வீடு தேடி வரும்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. உங்களுக்கு இந்த 2023ஆம் ஆண்டில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். ருசியான உணவை விரும்புவீர்கள். இந்த ஆண்டு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள், செல்வம் செல்வாக்கு கூடும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். சனி பகவான் நிறைய யோகத்தை தரப்போகிறார். பண வருமானம் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிவது நல்லது. இந்த ஆண்டு ராசியான நிறம் ப்ளூ, பச்சை, ராசியான எண்கள். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ராசியான எண் 6. வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே..2023ஆம் ஆண்டு உங்களுக்கு சாதகமாக உள்ளது. அஷ்டமத்து சனி முடிந்து சனிபகவான் 9ஆம் வீட்டில் பாக்ய சனியாக அமரப்போகிறார். அதே போல குரு பகவானும் உங்களுக்கு இந்த ஆண்டு பத்தாம் வீட்டிலும் லாப ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போகிறார். உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் இந்த ஆண்டு முடிவுக்கு வரும். பண வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினை நீங்கும். குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்க வியாழக்கிழமையில் ராகவேந்திரரை மறக்காமல் வணங்கவும். மிதுனம் ராசி, லக்னகாரர்கள் இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைய ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவி செய்யுங்கள். பேனா, நோட்டு புத்தகம் வாங்கி கொடுக்கலாம். இந்த ஆண்டு நீங்கள் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை பயன்படுத்தவும். இந்த ஆண்டு உங்களுக்கு ராசியான நிறம் 5.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே..2023ஆம் ஆண்டு உங்களுக்கு இந்த ஆண்டு வேலை, தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்படையும். பால் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு சில மாதங்கள் கிடைப்பதால் வேலை தொழிலில் புரமோசன் கிடைக்கும். குரு பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சனி பகவான் அஷ்டமத்து சனியாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த ஆண்டு நீங்கள் சனி பகவான் மனம் குளிரும் படி நடந்து கொள்ளுங்கள். இரும்பு தொடர்பான பொருட்களை நிதானமாக கையாளுங்கள். கறுப்பு நிற ஆடைகளை தவிர்த்து விடுவது நல்லது. 2023ஆம் ஆண்டில் வெள்ளை நிற ஆடைகளை அணிவது நல்லது. உங்களுக்கு இந்த ஆண்டு சாதகமான எண் 4. வேலை,பிசினஸ் சார்ந்த செயல்களை செய்யும் போது இந்த எண்ணை பயன்படுத்துங்கள் வெற்றிகள் உங்களுக்கு தேடி வரும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications