புத்தாண்டு ராசி பலன் 2023: இந்த 4 ராசிக்காரர்கள் மறக்காம ஃபாலோ பண்ணுங்க.. வெற்றிகள் தேடி வரும்
சென்னை: 2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகின்றன. சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சில நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும். சில எண்கள் சாதகத்தை தரக்கூடும். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் என்ன நிறங்கள் சாதகமாக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களுக்கும் சாதகமான நிறங்கள் உள்ளன. நவ கிரகங்களுக்கு சாதகமான எண்கள் உள்ளன. அந்த நிறங்களும் எண்களும் சிலருக்கு வெற்றியைத் தேடித்தரும். நம்பிக்கையையும் தைரியத்தையும் தரக்கூடும்.
சூரியன், புதன்,சுக்கிரன், செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் வெற்றியை தக்க வைக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. ராஜாதி ராஜ யோகம் கொண்டவர்கள் நீங்கள்தான். 2023ஆம் ஆண்டு உங்களுக்கான ஆண்டாக அமைந்துள்ளது. அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு இது அற்புதங்கள் நிறைந்த ஆண்டு. தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் நீங்கள்தான். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் நிறைந்த ஆண்டு. இந்த ஆண்டு உங்களுக்கு சனிபகவான் பார்வை கிடைக்கிறது. 4 மாதங்களுக்குப் பிறகு உங்களுக்கு குரு பார்வை கிடைக்கிறது. எனவே பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். குரு சண்டாள யோகம் உங்களுடைய தொழிலில் லாபத்தை அதிகரிக்கும். இந்த ஆண்டு தினசரி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கண் பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். இந்த ஆண்டு நீங்கள் அணிய வேண்டிய நிறங்கள் வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு, மெருன். தாமரை மலர் வைத்து சூரிய பகவானை வணங்கலாம். உங்களுக்கு ராசியான எண்கள் 1,3,9.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக்கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்களுக்கு 2023ஆம் ஆண்டு நிறைய நன்மைகள் நிறைந்த ஆண்டாக உள்ளது. அறிவாற்றல் கொண்டவர்கள்..படைப்பாளிகள்..திறமைசாலிகள் கன்னி ராசிகளில் பிறந்தவர்கள்தான். ஆசிரியத்துறை, ஜோதிடம், பத்திரிக்கை துறையில் அதிகம் சாதிப்பவர்கள் கன்னி ராசிகளில் பிறந்தவர்கள்தான். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி சாதகமாக இருந்தாலும் ஆண்டு பிற்பகுதியில் குரு சாதகமாக இல்லை. கேது பகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் ஆலய தரிசனம் செய்வது நல்லது. சர்க்கரை பொங்கல் செய்து பிரசாதம் வழங்குங்கள். இந்த ஆண்டு நீங்கள் புதன்கிழமை விரதம் இருந்து மீனாட்சி அம்மனை வணங்குவது நல்லது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று மல்லிகை, முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். இனிப்பான உணவுகளை தானம் செய்யுங்கள் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ராசியான நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை. ராசியான எண்கள் 5 மற்றும் 6 தடைகள் நீங்கி வெற்றிகள் தேடி வரும்.

துலாம்
துலாம் ராசி மற்றும் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2023ஆம் ஆண்டு நவ கிரகங்கள் சாதகமாக உள்ளன. சனிபகவான் 5ஆம் வீட்டிற்கு சென்று பயணம் செய்கிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டிற்கு வருவதால் வேலையில் புரமோசன் கிடைக்கும் பண வருமானமும் அதிகரிக்கும். உங்கள் ராசி லக்னாதிபதி சுக்கிரனின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கப்போகிறது. உங்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அறிவுப்பூர்வமாக எதையும் முடிவு செய்வீர்கள். உங்களின் அழகுணர்ச்சி அதிகரிக்கும். புதன், வெள்ளிக்கிழமைகளில் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி மல்லிகை மலர் சூட்டி வணங்குங்கள். வெண்மை நிற புறாக்களை பார்ப்பது நல்லது. ராசியான நிறங்கள் மஞ்சள், பச்சை,
இந்த ஆண்டு ராசியான எண்கள் 5 மற்றும் 6. ஜென்ம நட்சத்திர நாளில் பழங்களை தானமாக கொடுப்பது நல்லது.
வெள்ளிக்கிழமை எந்த காரணத்திற்காகவும் அசைவ உணவு சாப்பிடாதீர்கள்.

விருச்சிகம்
2023ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கு வேலை தொழில் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு குரு பகவான் பார்வை முதல் நான்கு நாட்கள் கிடைப்பதால் தொழிலில் லாபம் அதிகமாகவே இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. சூரியனும், செவ்வாயும் ஆண்டு முழுவதும் சாதகமாகவே உள்ளது. சுக்கிரனால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் வரும். நல்ல வார்த்தைகளை பேசுங்கள். குருவின் அருளால் உங்களுக்கு பண வரவு வரும். எண்ணம் போல வாழ்வு என்று சொல்வார்கள். இந்த ஆண்டு முழுவதும் நல்லதை நினைத்து நல்லதே பேசுங்கள். தினசரியும் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் வெளிர் மஞ்சள், மெருன் நிறத்தை பயன்படுத்தவும் ராசியான எண்கள் 1,3, 9. மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வருவது நல்லது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications