ஆடி மாத ராசிபலன்கள் - 2017

Posted By:
Subscribe to Oneindia Tamil

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்

ஆடி மாத ராசிபலன்கள் - 2017

ஆடி மாத ராசி பலன்கள்

ஆடி மாத ராசி பலன்கள்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - 5-ஆம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 10-ஆம் தேதி மிதுனம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் வாகனம் வாங்குவீர்கள் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும் தொழில் தொடர்பாக வாகனம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் 05ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும் காசு பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும் 10-ஆம் தேதிக்குப் பிறகு மனைவி வீட்டார் வகையில் நல்ல செய்தி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் ஏதோ ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருக்கும், செய் தொழிலில் கவனம் இருக்காது. ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார தொழில் லாபம் அதிகரிக்கும் எண்ணங்கள் நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு இட மாற்றம் உண்டாகும் அலுவல் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் மனதில் குழப்பம் உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு பேச்சில் இனிமை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் தொழில் வியாபாரம் சம்பந்தமாக நல்ல தகவல் வந்து சேரும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை மராமத்து செய்யும் நிலை உண்டாகும் கல்வியில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எல்லா காரியங்களும் சிறப்படையும்..

மிதுனம்

மிதுனம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பள உயர்வு கிடைக்கும் பண வரவு அதிகரிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கோபத்தை தவிர்க்கவும் சகோதரர்கள் மூலம் பணம் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு சாதுரியம் அதிகரிக்கும் 05ம் தேதிக்குப் பிறகு நல்ல தகவல் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் ஆசை நிறைவேறும் அசையா சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு மனதில் அமைதி அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் உண்டாகும் உளைச்சலை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

கடகம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் 05ம் தேதிக்குப் பிறகு பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் அலைச்சல் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு வீண் செலவுகளில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் உல்லாசப் பயணம் செல்வீர்கள் சொந்தக்காரர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் பிரச்சினைகளை உண்டாக்கும் பேச்சுகளை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகன விபத்துக்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சுய கௌரவத்திற்க்காக செலவுகள் செய்ய வேண்டி வரும் தொழில் காரணமாக வெளியூரில் வீடு பார்க்கும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு முதலீடுகள் அதிகரிக்கும் தொழிற்சாலைக்காக புதிய இயந்திரங்கள் வாங்குவீர்கள். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக அதிகமாக செலவழிக்கும் நிலை உண்டாகும் 05ம் தேதிக்குப் பிறகு புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் 10ம் தேதிக்குப் பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்குவீர்கள் பழைய ஓட்டு வீட்டை வாங்குவீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் குழப்பத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்பைத் தரும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் வீடு நிலம் வாங்கி விற்கும் தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சில்லரை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 05ம் தேதிக்குப் பிறகு தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் அமைதி நிலவும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு ஜவுளி தொழில் மேன்மை நிலை அடையும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும் அலைச்சல் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் தாத்தாவுக்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

துலாம்

துலாம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் அப்பாவின் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் தொழிலில் உதவி கிடைக்கும் தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உதவி கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழில் சிறப்படையும் 05ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனால் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோவில் திருப்பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை 10ம் தேதிக்குப் பிறகு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் அப்பாவின் ஆலோசனை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்துக்களில் பங்கு கிடைக்கும் நினைப்பதெல்லாம் நடக்கும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும் 05ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை தரும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் முதலீடுகள் செய்வீர்கள் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு பெண்களால் மனக் கஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மயக்கம் அதிகரிக்கும் உடலில் மந்தத் தன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றி உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடுகட்ட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்..

தனுசு

தனுசு

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் மன அழுத்தம் உண்டாகும் அப்பாவுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகன விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் நெருப்பினால் காயம் உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லை உண்டாகும் 05ம் தேதிக்குப் பிறகு உயர்கல்வியில் சிறப்பு உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகும் 10ம் தேதிக்குப் பிறகு பெண்களால் நன்மை உண்டாகும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும் வீண் செலவுகளை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாத்தாவுடன் பிரச்சினையை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும்.

மகரம்

மகரம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழிலின் காரணமாக நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும் வியாபாரம் விருத்தியடையும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும் வீடு மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் சில்லரை வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் 05ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனுடன் மனஸ்தாபம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் குல தெய்வ அருள் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 1`0ம் தேதிக்குப் பிறகு பெண்களால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் வாகன விபத்துக்கள் உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் சேவை தொழிலில் சிறப்பு உண்டாகும் உழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உஷ்ணத்தினால் நோய் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மாமனுடன் சச்சரவைத் தவிர்க்கவும் 05ம் தேதிக்குப் பிறகு வியாபாரம் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் உண்டாகும் மன கஷ்டத்தை தவிர்க்கவும் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும் 10ம் தேதிக்குப் பிறகு உல்லாசப் பயணம் செல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் நண்பர்களால் உதவி கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் அமைதி நிலவும் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை தரும் 05ம் தேதிக்குப் பிறகு வியாபாரத்திற்க்காக கடன் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நண்பர்களினால் நன்மை உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் உண்டாகும் 10ம் தேதிக்குப் பிறகு புதிய வீட்டுக்கு குடி செல்லும் நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rasi Palan for the Tamil month of Aadi from July 16,2017 to August 16,2017.
Please Wait while comments are loading...