Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியை...தங்கம் வாங்க நல்ல நேரம் - 12 ராசிக்காரர்களும் தங்கம் வாங்க நல்ல நாட்கள்

அட்சய திருதியை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் 12 ராசிக்காரர்களும் எந்த நாளில் தங்கம் வாங்கலாம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: அட்சய திருதியை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்றும் 12 ராசிக்காரர்களும் எந்த நாளில் தங்கம் வாங்கலாம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், ஐந்தாம் வீட்டில் உள்ள கிரகம் இரண்டாம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.

 தங்கத்தின் மகிமை

தங்கத்தின் மகிமை

தங்கம் அணிவதால் சமூக அந்தஸ்து உயரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறை சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க அனைவரும் விரும்புகின்றனர். அதே போல தனத்திரயோதசி நாளிலும் தங்கம் வாங்குகின்றனர். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை நல்ல நாள்

அட்சய திருதியை நல்ல நாள்

சித்திரை மாதம் அமாவாசை முடிந்து வளர்பிறை திருதியை நாள் தங்கம் வாங்க நல்ல நாள் என்பது நம்பிக்கை. அட்சய என்றால் வளர்தல் என்று பொருள். நாளைய தினம் அட்சய திருதியை நாளில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையும் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரைக்கும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரைக்கும் இரவு 7 மணி முதல் 8 மணி வரைக்கும் தங்கம் வாங்க நல்ல நேரம் ஆகும்.

 எந்த நாளில் தங்கம் வாங்கலாம்

எந்த நாளில் தங்கம் வாங்கலாம்

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினாலும் கூட அதிகம் வாங்கும் யோகம் வரும். அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும்.

எந்த ராசிக்காரர்கள் எப்போது வாங்கலாம்

எந்த ராசிக்காரர்கள் எப்போது வாங்கலாம்

மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி நகை வாங்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம். சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளியும் நகை வாங்கலாம்.

 நகை அதிகம் சேரும்

நகை அதிகம் சேரும்

கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும், விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும், கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும் மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள். இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.

 வீட்டில் தங்கம் தங்கம்

வீட்டில் தங்கம் தங்கம்

சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும். கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் தான் நகை வாங்குவதற்கு நல்ல நாட்களாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் நகை வாங்கினால், அந்த நகை அவர்களிடத்தில் இருக்காதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+