Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குணம் பார்த்து ஜோடி சேர்க்கணும் - கரணம் தப்பினால் மரணமாகிவிடும்

திருமணத்திற்கு ஜோடி சேர்க்கும் போது பத்துப்பொருத்தம், ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல கரணம் பொருத்தமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணத்திற்கு ஜோடி சேர்க்கும் போது பத்துப்பொருத்தம், ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல கரணம் பொருத்தமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். கரணங்களுக்கும் தம்பதியர் இடையே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் முறிந்து போவதற்கும் எப்படி காரணம் என்று யோசிக்கிறீர்களா?
கரணம் என்பது திதியில் பாதி. ஒரு கரணம் என்பது ஆறு டிகிரி கொண்டது. மொத்தம் 11 கரணங்கள். ஒருவர் எந்த கரணத்தில் பிறந்தவர் என்பதை வைத்து அவரது குணத்தை அறிந்து கொள்ளலாம். காலையில் ஒரு கரணமும், மாலையில் ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு.

சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை , 16 நாட்கள் தேய்பிறை ஒருமாத காலத்தில் சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது தான் கரணங்கள். இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில், அத்திதியின் அரைப் பகுதியாகும். மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் ஸ்திர கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் சர கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும்.

அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும் ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசயங்கள் இருக்கும் அது பற்றி பார்ப்போம். பவம் ,பாலவம், கௌலவம், தைதுலை,கரசை ஆகியவை சுபகரணங்களாகும். வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம் , நாகவம் , கிம்ஸ்துக்னம் ஆகியவை அசுபகரணங்களாகும்.

கரணங்கள் விலங்குகள்

கரணங்கள் விலங்குகள்

பவம் - சிங்கம், பாலவம் - புலி, கௌலவம் - பன்றி, தைதுளை - கழுகு, கரசை - யானை, வணிசை- எருது, பத்தரை - கோழி, சகுனி - காக்கை, சதுஷ்பாதம் - நாய், நாகவம் - பாம்பு, கிம்ஸ்துக்னம் - புழு. இந்த 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள். தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே அதிகமாக பிரதிபலிப்பார்கள். நாய் குணம் கொண்டவர்களுடன் கோழி குணமோ, காகம் குணமோ கொண்டவர்களை ஜோடி சேர்த்தால் உறவு இனிக்காது தம்பதியரிடையே இதுதான் பிரிவுக்கு காரணமாகிறது.

விலங்குகளின் குணாதிசயங்கள்

விலங்குகளின் குணாதிசயங்கள்

திருமணத்திற்கு ஜோடி சேர்க்கும் போது பத்துப்பொருத்தம், ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல கரணம் பொருத்தமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். கரணங்களுக்கும் தம்பதியர் இடையே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் முறிந்து போவதற்கும் எப்படி காரணம் என்று யோசிக்கிறீர்களா? அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர் ஜோதிடர்கள். கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சந்தோஷமாக இருக்கும். அதே நேரம் மற்ற சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு அமைத்துக்கொள்ளும்.

எந்த விலங்குகளுக்கு எவ்வளவு நேரம்

எந்த விலங்குகளுக்கு எவ்வளவு நேரம்

காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி, கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி இல்லை. குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது. உதாரணமாக கோழி அல்லது சேவலின் உறவும் , காகங்கள் உறவில் ஈடுபடுவதும் சில நொடிகளே, அதே நேரம் நாய்,பன்றி,கழுதை,புழு போன்ற விலங்குகள் உறவில் நீண்ட நேரம் ஈடுபடும்.

சிங்கம் - புலி

சிங்கம் - புலி

பவம் கரணத்தில் பிறந்தவர்கள் சிங்கம் போன்றவர்கள். இவர்கள் எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி கொண்டவர். பாலவம் கரணத்தில் பிறந்தவர்கள் புலி போன்றவர் சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் குணமுடையவர்.

பன்றி, கழுதை

பன்றி, கழுதை

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அரசாங்கப் பணியாளராக இருப்பார்கள். நல்ல ஆச்சாரமுடையவர், பெற்றவர்கள் மீது மதிப்பு மரியாதை கொண்டிருப்பார்கள். நிலபுலன்களைச் சம்பாதிப்பார்கள், சொத்துக்களும் வண்டி வாகன வசதியும் கொண்டிருப்பார்கள். தைதூலை கரணத்தில் பிறந்தவர்கள் தருமம் செய்ய மாட்டார்கள். அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுவார்கள்.

யானை - எருது - சேவல்

யானை - எருது - சேவல்

கரசை கரணத்தில் பிறந்தவர்கள் அரசாங்கத்தின் மூலம் பணவரவு கிடைக்கும். எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவர்கள். அனைவருக்கும் உதவக்கூடிய தரும சிந்தனை உள்ளவர்கள். வணிசை கரணத்தில் பிறந்தவர்கள் கற்பனையான வார்த்தைகளை பேசுவார்கள். இந்த உலகத்தோடு ஒத்து வாழமாட்டார்கள். பத்திரையில் பிறந்தவர்கள் சஞ்சல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

காகம், நாய், பாம்பு,புழு

காகம், நாய், பாம்பு,புழு

சகுனியில் பிறந்தவர்கள் காகம் போன்றவர்கள் நல்ல அறிவு உள்ளவர்கள், அழகானவர்கள் தைரியசாலிகள் மிகுந்த செல்வம் உடையவர்கள். நாய் குணம் கொண்ட சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் பெண் பிரியர்கள். வறுமை உடையவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற மாட்டார்கள். நாகவத்தில் பிறந்தவர்கள் துன்பத்தை வெல்பவர்கள். உத்தம குணம் கொண்டவர் சுவையான உணவு உண்பவர்கள். கிம்ஸ்துகினத்தில் பிறந்தவர்கள் பெற்றோர்கள் மீது பற்று கொண்டவர்கள். சகோதரர்கள் மீது பாசம் கொண்டவர்கள்.

பொருத்தம் ரொம்ப முக்கியம்

பொருத்தம் ரொம்ப முக்கியம்

ஒரு கோழி குணம் கொண்ட பத்திரை கரணத்தில் பிறந்தவர்களுக்கும் காகத்தின் அதாவது சகுனி கரணத்தில் பிறந்த ஆண்களுக்கு உறவில் ஈடுபடும் நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும். அதே நேரம் ஒரு பன்றியின் குணம் கொண்ட கௌலவம் கரணத்தில் பிறந்தவரோ அல்லது நாயின் குணம் கொண்ட சதுஷ்பாதம் கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும். எனவேதான் பொருத்தமான கரணம் பார்த்து ஜோடி சேர்ப்பது நல்லது. இதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+