இந்தியாவில் தெரியும் சந்திர கிரகணம்.. யாரெல்லாம் பார்க்கக் கூடாது? பரிகாரம் செய்ய வேண்டியது யார்?
சென்னை: சந்திர கிரகணம் நாளை இரவு ஐப்பசி பவுர்ணமி நாளில் நிகழப்போகிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் வெறும் கண்களால் பார்க்கலாம். சந்திர கிரகணத்தை யாரெல்லாம் பார்க்கக் கூடாது, எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

வானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை கிரகணம் என கூறுகின்றனர். பவுர்ணமி நாளில் சூரியனும் சந்திரனும் மிகவும் சரியாக 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார். பவுர்ணமி அன்று சந்திரன் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 14ஆம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. மகாளாய அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், கேது ஒரே வீட்டில் பயணம் செய்தது.
சந்திர கிரகணம் நாளைய தினம் ஐப்பசி பவுர்ணமி நாளில் அதாவது அக்டோபர் 28 ஆம் தேதி இரவு மேஷம் ராசியில் சந்திரன், ராகு, குரு உடன் இணைந்திருக்க, சூரியன், கேது, செவ்வாய், புதன், சம சப்தமமாக துலாம் ராசியில் பயணம் செய்கின்றன.
இந்த சந்திர கிரகணம் அபூர்வமானது. இந்த நேரத்தில் நாம் நினைத்து வேண்டிக்கொள்ளும் காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கிரகண நேரம் சக்தி வாய்ந்தது என்பதால்தான் அந்த நேரத்தில் உச்சரிக்கப்படும் மந்திரங்களுக்கு சக்தி அதிகரிக்கிறது. கிரகண நேரத்தில் வெளியாகும் கதிர்வீச்சினால் யாருக்கும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதாலேயே ஆலயங்கள் மூடப்படுகின்றன.
சந்திர கிரகண நாளில் எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 28.10.2023 சனிக்கிழமை நாளை இரவு 11.30 மணிக்கு தொடங்கி இரவு 2.30 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் தொடங்கி அஸ்வினி நட்சத்திரம் நாலாம் பாதத்தில் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் கர்ப்பிணி பெண்களை தவிர்ப்பது நல்லது என்று பதிவிட்டுள்ளார். கர்ப்பிணிகள் வெளியில் வராமல் இருப்பது உத்தமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வினி நட்சத்திரத்தில் நடைபெறுவதால் அஸ்வினி, மகம் ,மூலம், பரணி,ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைக்கு குளித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய சிவன் கோயிலுக்கு சென்று விநாயகருக்கும் , சிவபெருமானுக்கும் ஒரு நெய் விளக்கு ஏற்றி உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது இதுவே சாந்தி பரிகாரம் செய்வது நல்லது என்றும் பாலாஜி ஹாசன் பதிவிட்டுள்ளார்.

சந்திரகிரகணம் நிகழ உள்ளதால் நாளைய தினம் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் இரவு 9 மணிக்கே தங்களின் உணவுகளை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். துளசியை போட்டு வைக்க வேண்டும்.
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும் என்பதாலேயே தாம்பத்ய உறவை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications