சென்னையை விட்டு பஞ்சாப் அணிக்கு போகும் அஸ்வின்... ஜாதகம் சாதகமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு பஞ்சாப் அணிக்கு இடம் பெயர்ந்துள்ளார் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின். இந்த இடப்பெயர்ச்சி அவருக்கு சாதகமா? பாதகமா என்பதை பார்க்கலாம்.
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விடை கொடுத்து விட்டார் ரவிச்சந்திர அஸ்வின். தனது புது வீடான பஞ்சாப் அணியில் குடியேறப்போகிறார். எப்பாடு பட்டாவது அஸ்வினை ஏலத்தில் எடுப்போம் என்று டோணி சொன்னது நடக்கவில்லை.
தனது சொந்த வீடான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடாமல் புதிதாக பஞ்சாப் அணிக்கு ஆடுவது சற்றே அஸ்வினுக்கு மன வருத்தம்தான் அதனால்தான் ஏலம் என்பது சூதாட்ட விடுதி போல தான்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தான் எனது புதிய வீடு என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மறக்க முடியாத நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை அணியில் அஸ்வின் இல்லாதது வருத்தம்தான் ஆனாலும் அசராத நம் மக்கள், பஞ்சாபில் ஆளப்போறான் தமிழன் என்று ட்விட்டர் போட்டு வாழ்த்தி வருகிறார்கள்.

அஸ்வின் ராசி, நட்சத்திரம்
சென்னையில் 1986 ஆம் ஆண்டு பிறந்த ரவிச்சந்திர அஸ்வின் கும்பராசிக்காரர். அவரது நட்சத்திரம் சதயம். பிறக்கும் போது ராகு தசை நடந்துள்ளது. அதன்பின்னர் 1988 ஆம் ஆண்டு முதல் 2004 ஆண்டு முதல் குருதிசை நடந்துள்ளது. 2004 முதல்2023 ஆம் ஆண்டு வரை சனி தசை காலமாகும்.

கிரிக்கெட் விளையாட்டு
சனி தசை தொடங்கியது முதலே அஸ்வினுக்கு ஏற்றம்தான். கிரிக்கெட்டில் பந்து வீச்சில் பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி எதிர் அணியினரை திணறடித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎஸ் டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இது 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது. இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கின்றன. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.

ரூ. 7.60 கோடி ஏலம்
இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் அஸ்வினை 7.60 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்த போதும் தக்க வைக்க முன்வரவில்லை.
|
அஸ்வின் நன்றி
தனது புதிய வீடான பஞ்சாப் அணியில் குடியேறப்போகிறார். இதற்காக நன்றியும் கூறி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அஸ்வினுக்கு இன்னும் 5 ஆண்டுகள் சனி தசை காலம் நடைபெறும். கும்பராசிக்கு சனிப்பெயர்ச்சியும், குருப்பெயர்ச்சியும் சாதகமாகவே உள்ளது. விளையாட்டுத்துறையில் அஸ்வின் பல சாதனைகள் படைக்க உள்ளார் என்றே அவரது ஜாதகக் கட்டமும் கோள்களின் அமர்வும் தெரிவிக்கின்றன. இனி பஞ்சாப் அணியில் ஆளப்போறான் தமிழன்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications