குரு பெயர்ச்சி 2020: சிம்ம ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.
சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியால் அதிக நன்மை நடைபெறப்போகிறது. பட்டம் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
சென்னை: சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் அருளும், இறைவனின் அருளும் தேடி வரப்போகிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி
கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி நிகழப்போகிறது. குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சிம்ம ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு
மகர ராசியில் நீச்சம் பெற்று அமர்ந்தாலும் ஆட்சி பெற்ற சனியுடன் இணைவதால் அபரிமிதமான நன்மைகள் நடைபெறும்.
குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீடு எட்டாம் வீட்டிற்கு உடையவர்.ஆறாம் வீட்டில் குரு நீச்சம் பெற்று சஞ்சரிப்பார். சனியோடு குரு இணைகிறார். நல்ல தன வரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் குதூகலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.
குரு ஆறாம் இடத்தில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ஆறாம் இடத்தில் சகடை யோகமாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. குருவின் பார்வையால் நிறைய நல்லது நடக்கப் போகிறது. குருவின் பார்வை உங்க ராசிக்கு 2, 10, 12ஆம் இடங்களின் மீது விழுகிறது.

குடும்பத்தில் உற்சாகம்
குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் உங்களுக்கு பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குருவிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். அம்மாவின் சொல் கேட்டு நடந்து கொள்ளுங்கள். 12ஆம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் தூர தேச பயணம் செல்ல முயற்சி செய்யலாம் நன்மைகள் நடைபெறும். வெளிநாடு சென்று கல்வி படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும். வேலை விசயமாக வெளிநாடு செல்லலாம்.

வேலையில் ப்ரமோசன்
ராசிக்கு பத்தாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் பத்தில் ராகு இருக்கிறார். குருவின் பார்வையால் தொழில் வேலையில் உயர்வு ஏற்படும். குருவின் ஆசியால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடந்த காலங்களில் வேலையிழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை நிரந்தரமடையும். சிலருக்கு சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கேட்ட இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். பட்டம் பதவிகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பொருளாதார நிலை உயரும்
ராகு பத்தாம் வீட்டில் இருப்பதால் குருவின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. புதிய தொழில் தொடங்கலாம். வங்கி லோன் வாங்குவீர்கள்.வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் மோதல் போக்கை விடவேண்டும். அமைதியாக இருப்பதே நல்லது. வேலை செய்யும் இடத்தில் சில கஷ்டங்கள் வந்தாலும் கவலைகள் மறையும்.

பண வரவு அதிகரிக்கும்
கடந்த காலங்களில் குரு ஐந்தாம் வீட்டில் சஞ்சரித்தாலும் சனி, கேது உடன் இணைந்து நிறைய தடைகள் ஏற்பட்டது. இப்போது குரு உடன் இருந்த கேது விலகிவிட்டது. பண வரவு அதிகரிக்கும். வார்த்தைக்கு மதிப்பு மரியாதை கூடும். பேச்சினால் தொழில் செய்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். முகம் தெரியாதவர்கள், அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பழக்க வழக்கம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

புத்திர பாக்கியம் கிடைக்கும்
குரு ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இடமாற்றம் கிடைக்கும். சிலர் புது வீட்டிற்கு குடிபோகும் யோகம் வருகிறது. குழந்தை வரம் கிடைக்காத தம்பதிகளுக்கு தோஷம் விலகி குரு குழந்தை பாக்கியத்தை கொடுக்கப் போகிறார். பிள்ளைகளினால் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். 2021 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமண யோகமும் கை கூடி வரப்போகிறது.

கடன் விசயத்தில் கவனம்
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. மறைமுக எதிரிகள் உருவாகுவார்கள் கவனம் தேவை. தேவையில்லாத கடன் சுமைகளை ஏற்றிக்கொள்ள வேண்டாம். கடன் பிரச்சினை நீங்கும் சுப காரியங்களுக்காக புதிய லோன் வாங்குவீர்கள்.

குரு பகவானுக்கு பரிகாரம்
இந்த குரு பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வயிறு பிரச்சினைகள் ஏற்படலாம் கவனம் தேவை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று அம்மனுக்கு மல்லிகைப்பூ கொடுத்து வணங்கலாம். பாதிப்புகள் நீங்க முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். குரு காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குங்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications